தவறு கணவன் மீதா? மனைவி மீதா?

மனைவிக்குக் கோபம்.
எதனால் என்று
கணவனுக்குத் தெரியவில்லை!
ஏனம்மா என் மீது கோபம்? -
எனக்கேட்கிறான் இளம் கணவன்.
என் கோபம் எதனால் என்று கூடவா
உங்களுக்குத் தெரியவில்லை? - என்று
கோபமாகக் கேட்கிறாள் மனைவி.

சரி! எனக்குத் தெரியவில்லை தான்.
இப்போதாவது சொல் -
உன் கோபம் எதனால் என்று!
மீண்டும் கேட்கிறான் கணவன்.
சொன்னால் உங்களுக்குப் புரியாது -
என்கிறாள் மனைவி!
அடடா! நான் என்ன தான் செய்வேன்?
உன் கோபம் எதனால் என்று
உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை!
சொல்லேன் என்று கேட்டாலும் சொல்ல மாட்டாய்!
இதில் என் மீது என்ன தப்பு கண்ணே?
அப்படியானால் என் மீது தான்
தப்பு என்கிறீர்களா?
கோ... என அழத் தொடங்குகிறாள்
அழகு மனைவி!
***
இப்போது சொல்லுங்கள்!
தவறு கணவன் மீதா? மனைவி மீதா?
நான் கணவனிடத்தில் தான் தவறு என்கிறேன்!
அதுவும் இரண்டு தவறுகள்!
ஒன்று: மனைவியின் உணர்வுகளைத் தாமாகவே புரிந்து கொள்ளத் தவறியது!
இரண்டு: உணர்ச்சிவசப்பட்ட மனைவியிடம் போய் விளக்கம் கேட்டுக் கொண்டிருப்பது!
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
***
(குறிப்பு: இந்த உரையாடல் - ஒரு அறிஞரின் You Tube சொற்பொழிவிலிருந்து...)

Comments