இரக்கம் – ஒரு முஸ்லிமின் அடிப்படைப் பண்பு!

இறைவனின் இரண்டு சிறப்பான பெயர்கள் தாம் -
அர்-ரஹ்மான் மற்றும் அர்-ரஹீம்.
பொருள்: அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்!

இரக்கம் என்பது இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கும்  ஓர் அழகிய பண்பு!
நமது இரக்கம் என்பது எல்லாரையும் தழுவி நிற்க வேண்டிய ஒரு பண்பு ஆகும்!

எங்கிருந்து துவங்கலாம்?

நீங்கள் உங்களிடமிருந்தே துவங்கலாம்!
என் மீதே நான் இரக்கப்பட வேண்டுமா என்ன?
ஆம்! அதற்குப் பெயர் தான் - self compassion.

ஏன் நான் என் மீதே இரக்கப்பட வேண்டும்?


தவறுகள் செய்து விட்ட பின்பு
தன்னையே வறுத்திக் கொள்ளாமல்
இறைவனிடம் திரும்பி -
பாவத்திலிருந்து மீண்டு விடுவதற்குத் தேவை
தன் மீதே இரக்கப் படுதல்!

அடுத்து - நம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு
கருணை காட்டுங்கள் என்பது ஓர் இறை கட்டளை!

அடுத்து கணவன் மனைவி மீது இரக்கப்பட வேண்டும்!
மனைவி கணவன் மீது இரக்கப்பட வேண்டும்!
அடுத்து - நமது குழந்தைகளுடன்!

அடுத்து - உறவினர்களுடன்!
சிலதுர் ரஹ்ம் என்பது நபிமொழி வழக்கு!
உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள் என்பது மிகவும்
ஊக்குவிக்கப்பட்ட ஒரு சுன்னத்!

அடுத்து - நம்பிக்கையாளர்களுடன்!
ருஹமாஉ பைனஹும் - என்பது இறை வாக்கு.
உலக முஸ்லிம்கள் அனைவரிடமும்
கருணையோடு நடந்து கொள்தல் என்பது
இறைவனின் எதிர்பார்ப்பு.

அடுத்து - நமது இரக்கப் பண்பு
உலக மக்கள் அனைவருக்கும் உரித்தானது!
இதில் எந்தவித ஐயமும் வேண்டாம்! ஏனெனில் -
இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை
இறைவன் எப்படி அழைக்கிறான் தெரியுமா?
ரஹ்மதுன் லில் ஆலமீன்!
அகில உலகங்களுக்கெல்லாம் ஓர் அருட்கொடை என்று!

படைப்பினங்கள் அனைத்தும் இறைவனின் குடும்பமே
என்றார்கள் - இறைவனின் திருத்தூதர் அவர்கள்!

எனவே - நம்மையே நாம் கேட்டுக் கொள்வோம்:

நான் இரக்க உணர்வு மிக்கவன் தானா?
பெற்றவர்களிடம் நான் பணிவு காட்டுகின்றேனா?
வாழ்க்கைத் துணையிடம் இரக்கம் காட்டுகின்றேனா?
குழந்தைகளை நான் முத்தமிடுகின்றேனா?
உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் நான் கொடுத்து வாழ்கின்றேனா?
நமது கருத்துகளுடன் முரண்படுகின்ற
முஸ்லிம் சகோதரனுக்கு நான் நலம் நாடுகின்றேனா?
முஸ்லிம் அல்லாதவர்களுடன்
மனிதத் தன்மையுடன் நான் நடந்து கொள்கின்றேனா?

இரக்க உணர்வைப் பொருத்தவரை – மொத்தத்தில் உங்களுக்கு எத்தனை மார்க் போட்டுக் கொள்வீர்கள்?

படிப்பினை: முஸ்லிம்கள் இரக்க மனம் படைத்தவர்கள் என்று பெயர் எடுத்தல் மிக அவசியம்!

Comments