கொடு! கொடுக்கப்படுவாய்!

கொடுப்பது என்பது இஸ்லாமியப் பண்பு ஆகும்!

கொடு! கொடுக்கப்படுவாய்!

நபி மொழி ஒன்று! கேள்விப்பட்டேன்! ஒரு அறிஞரின் சொற்பொழிவிலிருந்து!

ஆதத்தின் மகனே! கொடு! கொடுக்கப்படுவாய்!


(அரபியில்: யா பனீ ஆதம்! அன்ஃபிக்! யுன்ஃபக் அலைக்க!)

(ஆதாரம் யாராவது எடுத்துத் தந்தால் அகம் மகிழ்வேன். நன்றி சொல்வேன்!)

இந்த நபிமொழியின் பொருள் என்ன?

ஆதத்தின் மக்களே! மக்களுக்காக செலவு செய்யுங்கள்! அல்லாஹ் நீங்கள் செலவு செய்ததை வீணாக்கி விட மாட்டான்! உங்களுக்கு அவன் மேலும் வழங்குவான் - என்பதே இதன் பொருள்!

பொதுவாக - இன்ஃபாக் - என்பது - பொருள்களை செலவு செய்வதை மட்டுமே குறித்திடாது! வல்லோன் நமக்கு வழங்கிய அனைத்து அருட்கொடைகளையும் மக்கள் நலனுக்காக செலவு செய்வதையே இன்ஃபாக் எனும் சொல் குறிக்கிறது.

Spend from what you have! - இது சாதாரண மொழிபெயர்ப்பு!

Spend from what you are! - இதுவே சரியான மொழிபெயர்ப்பு!

இதன்படி பார்த்தால் -

உனது பொருளை மக்களுக்காக செலவு செய்!

உனது நேரத்த்தை மக்களுக்காக செலவு செய்!

உனது அறிவாற்றலை மக்களுக்காகப் பயன்படுத்து! உனது திறமைகளைக் கொண்டு மக்களுக்கு உதவி செய்! (பார்க்க அல் குர் ஆன் 18: 83 - 98)

உனது இதயத்தை மக்களுக்குக் கொடு! மக்களுக்கு உன் அன்பைக் கொடு! இரக்கப்படு! அவர்கள் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேள்! ஆறுதல் சொல்! துணை நில்!

இப்படி – இன்ஃபாக் என்பதன் பொருள் விரிகிறது!

We are supposed to be contributors to the whole of humanity!

And not merely consumers of what are contributed by others!

நாம் ஒட்டு மொத்த உலக சமூகத்துக்கும் வழங்கி வாழ வேண்டியவர்கள்!

மற்றவர்கள் உலகுக்கு வழங்கியதை “அனுபவித்து” வாழ்பவர்கள் அல்ல!

கொடு! கொடுக்கப்படுவாய்!

Comments