இஸ்லாமிய நற்பண்புகளால் இந்தியாவை அலங்கரிப்போம்!

முஸ்லிம்கள் -

எந்த இடத்தில் வாழ்ந்தாலும் சரி

எந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தாலும் சரி

அங்கே அவர்களுக்கு நீங்காதக் கடமை ஒன்றிருக்கின்றது!

அவர்கள் வாழ்கின்ற அந்தச் சூழலை அழகுபடுத்துவது தான் அது!

அந்தப் பகுதிக்கு மதிப்பு சேர்ப்பது தான் அது!

தமக்கு இறைவன் வழங்கிட்ட அனைத்தையும்

அவர்கள் வாழ்கின்ற பகுதி மக்களுக்கு

“வழங்கி” வாழ வேண்டியவர்கள் முஸ்லிம்கள்!

அதன் மூலம் அந்தப் பகுதிக்கு மதிப்பு சேர்ப்பவர்கள் தான் முஸ்லிம்கள்! ஆம்!

They are to be an “added value” wherever they are!

முஸ்லிம்கள் வழங்க வேண்டியவற்றுள் முதலிடம் வகிப்பது

“இஸ்லாமிய நற்பண்புகள்” தாம் என்றே நாம் கருதுகிறோம்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களைப் பொருத்தவரை

நமது முதன்மையான கடமை -

இஸ்லாமிய நற்பண்புகளால் இந்தியாவை அலங்கரிப்பது தான்!

Comments

Post a Comment