தொழுகையின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!

தொழுகையின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்!

(ஹைய 'அலஸ் ஸலாஹ்........ஹைய 'அலல் ஃபலாஹ்.....)

– இது நாம் தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பொலியில் கேட்கக் கூடிய வாசகங்கள் தான்.

ஸலாஹ் என்றால் தொழுகை. ஃபலாஹ் என்றால் வெற்றி.

தொழுகைக்கும் வெற்றிக்கும் என்ன சம்பந்தம்?

நமது தோல்விகளுக்கு நாம் தொழாமல் இருப்பது தான் காரணமா?


ஐந்து வேளையும் தவறாது தொழுதால் வெற்றி தானாக வந்து விடுமா?

நம்மில் பலர் தொழத்தான் செய்கிறார்கள். ஆனாலும் அவர்கள் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லையே!!

வெற்றி என்பது "மறுமையில்" என்கிறீர்களா?

ஃபலாஹ் என்றால் அது மறுமை வெற்றியை மட்டும் தான் குறிக்கிறதா என்றால் அது தான் இல்லை! அது ஈருலக வெற்றியையும் சேர்த்தே குறிக்கும் சொல்லாயிற்றே!!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்! ஈருலகிலும் அவர்களுக்கு வெற்றி தானே!

நபித்தோழர்கள் அனைவரும் வேளை தவறாது தொழுதார்கள். வெற்றி அவர்களின் காலடியில் வந்து விழுந்ததே!

அப்படியானால் நமது தொழுகைக்கும் அவர்களின் தொழுகைக்கும் என்ன வேறுபாடு?

சிந்திப்போமா? 

Comments