தூய்மை வெற்றி தரும்!

தொழுகை தூய்மையுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றது.
தூய்மையில்லாத தொழுகை ஏற்கப்படுவதில்லை!

தொழுகை நமக்கு தூய்மையைக் கற்றுத் தருகின்றது!
உடல் தூய்மை! உடை தூய்மை! இடம் தூய்மை!
இம்முன்றையும் ஒரு சேரக் கற்றுத்தருகின்றது தொழுகை!

தூய்மை நமக்கு வெற்றி தரும்! எப்படி?

தொழுகை கற்றுத் தருகின்ற தூய்மையை
நமது வாழ்விலும் கடைபிடித்தால்!

நீங்கள் ஒரு நிறுவனத்தை நடத்துகிறீர்கள்.
அந்த நிறுவனத்தில் நீங்கள் தூய்மையைக் கடைபிடித்தால்!

நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கின்றீர்கள்.
உங்கள் பணியிடத்தை நீங்கள் தூய்மையுடன் வைத்துக் கொண்டால்!

நீங்கள் ஒரு குடும்பத்தலைவன்! அல்லது ஒரு குடும்பத் தலைவி!
உங்கள் இல்லத்தை நீங்கள் தூய்மையுடன் வைத்துக் கொண்டால்!

வெற்றி உங்களுடையதே!

நீங்கள் வேலை தேடிச் செல்கிறீர்கள்.
உடல் தூய்மையுடன்! உடைத் தூய்மையுடன்!
வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்!

நீங்கள் தூய்மையை அலட்சியம் செய்கிறீர்கள் எனில் -

மக்கள் உங்களை நெருங்க மாட்டார்கள்!

நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள்!

உங்களை வேலைக்கு யாரும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்!

உங்கள் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பது கடினம்!

உங்கள் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சி பாதிக்கப்படும்!

உங்கள் குடும்பத்தில் பெண்ணெடுக்க பெண் கொடுக்கத் தயங்குவார்கள்!

கணவன் மனைவி இருவருக்குமே தூய்மை அவசியம்!
தாம்பத்தியம் சிறந்திட!

பள்ளிக்கூடங்களில் தூய்மை அவசியம்!
பெற்றோர்கள் பாராட்டுவார்கள்!

பள்ளிவாசல்களைத் தூய்மையாக வைத்துக் கொண்டால்
வந்து தொழுகின்ற பயணிகள் கூட உங்களுக்கு து ஆ செய்து விட்டுச் செல்வார்கள்!

பெற்றோர்களே!

உங்கள் குழந்தைகளுக்கு தொழுகையுடன் சேர்த்து
தூய்மையையும் கற்றுக் கொடுங்கள்!
உங்களையே முன்மாதிரியாக்கிக் கொள்ளத் தவறாதீர்கள்!

வெற்றி உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் தான்!

Comments