அழகான விமர்சனமும் அழகில்லாத பாராட்டும்!

உங்களுக்கு அவசியமான ஒன்றை

சிறப்பாகச் செய்து தருகின்றார் மனைவி!

ஒரு கணவர் : சிரிக்காமல், சீரியஸான முகத்துடன் பாராட்டி வைக்கிறார்!

இன்னொருவர் : சிரித்துக் கொண்டே மலர்ந்த முகத்துடன் பாராட்டுகின்றார்!

அது போன்றே அவசியமான இன்னொன்றை

தப்பும் தவறுமாக செய்து கொடுக்கின்றார் மனைவி!

ஒரு கணவர் - கடுமையான முகத்துடன், சுடும் சொற்களால் விமர்சிக்கிறார்!

இன்னொருவர் - சிரித்த முகத்துடன், சுட்டு விடாத சொற்களால் விமர்சிக்கிறார்!

நீங்கள் எப்படிப்பட்ட கணவர்?

**

ஹஸன் என்றால் அழகு என்று பொருள்!

ஹஸனா என்றால் நன்மை என்று பொருள்!

நன்மையான ஒன்றை அழகாகத்தான் செய்திட வேண்டும்!

அழகில்லாத நன்மையை இறைவன் ஏற்பதில்லை!

"கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின்
தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும்..." (குர் ஆன் 2:263)

இதில் - நாம் சிந்திப்பதற்கு நிறைய இருக்கின்றது!

Comments