தொழுகை - பயிலரங்கம்: 002 - கருத்துகள்

Feedback: Salat Workshop No: 002
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் பெண்கள் அறிவியல் கலைக் கல்லூரியில் 19 - 12 - 2015 அன்று - தொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி - எனும் எமது பயிலரங்கம் இறையருளால் நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ்!

அதில் கலந்து கொண்ட சில மாணவிகளின் கருத்துகள்:

"இதைப் போன்ற ஒரு பயிலரங்கத்தில் நாங்கள் கலந்து கொண்டது கிடையாது. இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், ஆர்வமானதாகவும், ஊக்குவிக்கக் கூடியதாகவும் இருந்தது. இதைப்போல், எங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் பயிற்சி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்களுடைய எதிர்காலத்துக்கு உதவும் வகையில் இருந்தது. இடைவேளைக்குப் பிறகு அடுத்து தாங்கள் என்ன கூறுவீர்கள் என தெரிந்து கொள்ளும் வகையில் ஆர்வமுடன் இருந்தோம். மீண்டும் எங்கள் கல்லூரிக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்."

"ஒரு மனிதன் தன்னை இதைவிட மிகவும் அழகாக புரிந்து கொள்ள முடியாது. அதற்கு மிகவும் நன்றி." - – ஒரு மாணவி

இப்பயிலரங்கம் மூலம் தொழுகையுடன் தொடர்புள்ள பல விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். அரபி மொழியின் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொண்டேன். தொழுகையின் மூலம் அனைத்தையும் பெற முடியும் என்பதையும், தொழுகையினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதையும், மேலும் பெண்களுக்காக வாழ்க்கையில் வெற்றி பெற நிதானம், பொறுமை ஆகியவை தேவை என்பதையும் கற்றுக்கொண்டோம். – ஒரு மாணவி

Comments