மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!

ஒரு தடவை அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் தமக்காகத் துஆ செய்யுமாறு கேட்டுக் கொண்டார்களாம். நபியவர்களும் இவ்வாறு துஆ கேட்டார்களாம்:

“யா அல்லாஹ்! ஆயிஷாவின் கடந்த காலப் பாவங்களையும், அவருடைய எதிர்காலப் பாவங்களையும் நீ மன்னிப்பாயாக!”

ஆயிஷா அவர்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை! முகம் மலரச் சிரித்து விட்டார்கள்!
“எனது இந்த துஆ உனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?” என்றார்கள் அண்ணலார் அவர்கள். “நான் மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்?” என்று பதில் அளித்தார்கள் ஆயிஷா அவர்கள்

“அல்லாஹ்வின் மீது ஆணையாக, இதே துஆவைத்தான் எனது (உம்மத்) சமூகத்துக்காக நான் ஒவ்வொரு தொழுகையிலும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றார்களாம் அண்ணலார் அவர்கள்! (நூல்: இப்னு ஹிப்பான்)

மனைவி, கணவனிடம் துஆ செய்யச் சொல்லிக் கேட்பதுவும், மனைவிக்காக கணவன் துஆ செய்வதும் சுன்னத் தான் என்பதை நினைவில் கொள்வோம்!

Comments