ஒவ்வொரு பாவத்திற்கும் பாவமன்னிப்புத் தேடிக்கொள்!

இறை உணர்வைப் பெற்றுக்கொள்!
உண்மையையே பேசு!
வாக்குறுதிகளை நிறைவேற்று!

நம்பி ஒப்படைக்கப்பட்டவைகளைப் பாதுகாத்துக் கொள்!
மோசம் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்!
அண்டை வீட்டாரைக் கவனித்துக் கொள்!

அமைதி வாழ்த்துக்களை (சலாம்) எத்தி வை!
நல்ல காரியங்களில் ஈடுபடு!
எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்!

நம்பிக்கையில் உறுதியாய் இரு!
குர் ஆனை மிக ஆழமாகப் புரிந்து கொள்!
மறுமை வாழ்க்கையை நேசி!

தீர்ப்புநாளை அஞ்சிப் பணிவாய் நடந்து கொள்!
- என்று உனக்கு நான் உபதேசம் செய்கிறேன்!

அறிவு நுட்பமுள்ள நல்லடியார்களை அவமானப்படுத்துவதிலிருந்தும்;
உண்மையாளர்களுக்குப் பொய் முகம் காட்டுவதிலிருந்தும்;

பாவம் செய்பவர்களுக்குக் கீழ்ப்படிவதிலிருந்தும்;
நியாயம் மிக்க தலைவருக்கு மாறு செய்வதிலிருந்தும்;
குழப்பம் விளைவிப்பதிலிருந்தும்;
உம்மை நான் தடுக்கின்றேன்!


ஒவ்வொரு கல்; ஒவ்வொரு மரம்; ஒவ்வொரு ஊர்
- ஆகிய எல்லா விஷயத்திலும் இறைவனை அஞ்சிக்கொள்!

ஒவ்வொரு பாவத்திற்கும் பாவமன்னிப்புத் தேடிக்கொள்!

இரகசியமாகச் செய்யப்பட்ட பாவத்துக்கு இரகசியமான பாவமன்னிப்புத் தேடிக்கொள்!

பகிரங்கமாகச் செய்யப்பட்ட பாவத்துக்கு பகிரங்கமான பாவமன்னிப்புத் தேடிக்கொள்!

- என்றும் உனக்கு நான் உபதேசம் செய்கிறேன்!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
தமக்கு இவ்வாறு உபதேசம் (counseling) செய்ததாக
முஆத் பின் ஜபல் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்!

Comments