உயிர் - மனிதம் - நம்பிக்கை

உனக்குள் உயிர் என்று ஒன்று
இருக்கும் வரை நீ -

புண்படுத்தப்படுவாய்!
சோதிக்கப்படுவாய்!
துன்புறுத்தப்படுவாய்!

ஒரு மனிதனாக
இருந்து கொண்டிருக்கும் வரை நீ -

தவறுகள் செய்வாய்
பாவங்கள் செய்வாய்
பின் வருந்தவும் செய்வாய்

ஒரு நம்பிக்கையாளனாக
தொடர்ந்து கொண்டிருக்கும் வரை நீ -

போராடக் கற்றுக் கொள்வாய்!
பாவங்களில் இருந்து மீள்வதற்கும் கற்றுக் கொள்வாய்!
உன் சோதனைகளில்  இருந்து மீண்டு வெற்றி பெறவும் கற்றுக்கொள்வாய்!
Comments