பக்கத்து வீட்டுத் தேன் என்ன - கசந்து விடவா செய்யும்?

ஷரீ’ஆ அல்லது ஷரீஅத் என்பதன் பொருள்
என்ன என்று தெரியுமா உங்களுக்கு?

ஷரீஅத் என்றால் – அது இஸ்லாமிய சட்டம் தானே?

ஆமாம்! அது அப்படித்தான்!
ஆனால் – அதனைக் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போமா?

சொல்லுங்களேன்.

ஷரீஅத் என்றால் அது –
தண்ணீருக்கு ஒருவரைஅழைத்துச் செல்லும் வழி என்று பொருள்!

தண்ணீருக்கு அழைத்துச் செல்லும் வழியா? என்ன சார் சொல்றீங்க?

ஆமாம்!

பாலைவனத்தின் நடுவில் ஒட்டகம்! ஒட்டகத்துடன் நீங்கள்!
தண்ணீரைக் காணோம்! என்ன செய்வீர்கள்?

கவலை தொற்றிக் கொள்கிறது.
மெதுவே பயணம் தொடர்கிறது.

திடீரென்று குனிந்து பார்க்கிறீர்கள்.
பாதை ஒன்று துவங்குவது போல் தெரிகிறது!

ஆமாம். பாதை தான்! அது குறுகலான பாதை அல்ல!
நன்றாக அகலமான பாதையாக அது இருக்கிறது!

அது என்ன பாதை?

தண்ணீரை நோக்கி ஒட்டகத்தை அழைத்துச் செல்கின்ற பாதை தான் அது!

அந்த வழியே சென்றால்

அது நீரால் நிரம்பி வழியும்
நீர்த்தேக்கம் ஒன்றுக்கு
உங்களைக் கொண்டு வந்து சேர்த்து விடும்!

அங்கே எவ்வளவு நீர் வேண்டுமானாலும் பருகிக் கொள்ளலாம்.
எவ்வளவு நீரை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்!

தடுப்பார் யாரும் இல்லை!

அது போலத்தான்,
மனிதன் நீதிக்கும், நேர்மைக்கும்,
உண்மைக்கும், நன்மைக்கும்
ஏங்கி அலைகிறான்!

ஒரு வழி தென்படுகிறது
அதன் பெயர் தான் ஷரீ-ஆ!

அதன் வழியைத் தொடர்ந்து சென்றால்

அந்த வழியின் முடிவில்
அமைதி இருக்கும்! நீதி இருக்கும்!
உண்மையும் நன்மையும் இருக்கும்!

அது அனைவருக்கும் கிடைக்கும்!
அது யாராக இருந்தாலும் சரி!

சகோதரர்களே!

பக்கத்து வீட்டுத் தேன் என்ன -
கசந்து விடவா செய்யும்?

Comments