ஷரீஆ - ஃபிக்ஹ் - முஸ்லிம் தனியார் சட்டம் - ஒரு விளக்கம்

அருமைச் சகோதரர், கண்ணியத்திற்குரிய மார்க்ஸ் அந்தோனிசாமி அவர்கள் முகநூலில் பின்வரும் கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார்கள். அந்தக் கேள்வியும், அதற்கு நான் எழுதிய பதிலும் கீழே:

கேள்வி:

எனக்கு ஒரு ஐயம் அறிஞர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

'முஸ்லிம் தனிநபர் சட்டம்' (Muslim Personal Law) என்கிறோமே அது 'ஷரியா' (Shariya) என்கிற வரையறைக்குள் வருமா, இல்லை 'ஃபிக்' (Fiqh) என்கிற வகையில் அடங்குமா?

எனது பதில்:


ஷரீஆ என்பது பரந்து விரிந்த, இஸ்லாத்தின் அனைத்துத் துறைகளையும் தழுவி நிற்கின்ற ஆழமான பொருளைக் கொண்ட ஒரு சொல். Way towards faithfulness என்பதை இச்சொல்லின் அடிப்படை மொழிபெயர்ப்பாக சொல்லலாம்.

ஆனால் ஷரீஆ என்றால் அதனை இஸ்லாமிய சட்டம் என்று பெரும்பாலும் பொருள் கொள்ளப்படுவதை - அதிலும் குறிப்பாக இஸ்லாமிய தண்டனை பற்றிய சட்டங்களைக் குறிக்கும் ஒரு சொல்லாகப் புரிந்து கொள்ளப்படுவதை - இஸ்லாமிய ஆய்வாளர்கள் - ஒத்துக் கொள்வதில்லை.

ஃபிக்ஹ் என்பதன் அடிப்படைப் பொருள் - ஆழமாக
ஒன்றைப் புரிந்து கொள்தல் - deep understanding - என்று பொருள்.

திருக்குர்ஆனையும் நபிமொழிகளையும் (textual understanding) ஆழமாகப் புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட ஒரு இடம் மற்றும் குறிப்பிட்ட ஒரு காலம் - (contextual understanding of time and space) பற்றிய ஆழமான புரிதல்களுடன் - இஸ்லாமிய ஆய்வு குறித்த அடிப்படை வரையரைகளுக்கு (usool al fiqh) உட்பட்டு - ஆய்வாளர்கள் (mujtahids) வழங்குகின்ற ஆய்வுத் தொகுப்பையே ஃபிக்ஹ் "சட்டம்" என்று புரிந்து கொள்ளலாம்.

அறிஞர்களின் ஆய்வு என்று வந்து விட்டாலே, கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு தானே! இமாம் மாலிக் அவர்கள், கலீஃபாவின் கருத்தை ஏற்க மறுத்ததன் காரணமும் இது தான்!

உங்கள் கேள்விக்கு என்ன பதில் என்றால் - ஷரீஆவுக்குள் ஃபிக்ஹ் அடக்கம். ஃபிக்ஹுக்குள் முஸ்லிம் தனி நபர் சட்டமும் அடக்கம். (இந்தப் பாரா எனது புரிதல் மட்டுமே.)

மிக எளிமையாக அதே நேரத்தில் நேரம் ஒதுக்கி இவைகளைப் புரிந்து கொள்ள நான் தங்களுக்குப் பரிந்துரைப்பது அறிஞர் தாரிக் ரமளான் அவர்கள் இது குறித்து எடுத்த வகுப்புகள். அனைத்து பாகங்களையும் கேட்டுப்பாருங்கள். முதல் பகுதி:

https://www.youtube.com/watch?v=MtXfGnHTypA

என் மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு!

Comments