அநாகரிகம் என்பது நம் வழி அல்ல!

வெறுப்பு எனும்
நெருப்பை அவர்கள்
அள்ளிக் கொட்டுகிறார்கள்!
இப்போது அவர்கள் இலக்கு தமிழகம்.
இடம் கொடுத்து விடாதீர்கள்!
என்ன செய்ய?

வெறுப்பு அவர்கள் வழி!
அன்பு நம் வழி!
தீமை அவர்கள் வழி!
நன்மை நம் வழி!
பொய் அவர்கள் வழி!
உண்மை நம் வழி!
பிரித்து வைப்பது அவர்கள் வழி!
சேர்த்து வைப்பது நம் வழி!
நண்பர்களை எதிரிகளாக சித்தரிப்பது அவர்கள் வழி!
எதிரியையும் நண்பனாக்கிக் காட்டுவது தான் நம் வழி!
இதுவே
இறைத்தூதருக்கு
இறைவன் கற்றுக்கொடுத்த வழி!
"நன்மையும் தீமையும் சமமாக மாட்டா!
நீங்கள் நன்மையைக் கொண்டே
தீமையைத் தடுத்துக் கொள்வீராக!
அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே
பகைமை இருந்ததோ
அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்!
(குர் ஆன் 41:34)
அல்லாஹ் சொல்வது பொய்யாகி விடாது!
இந்த இறை உத்தரவுக்கு செயல் வடிவம்
கொடுக்கும் நேரம் இதோ
வந்து விட்டது!
இந்த ஒன்றில் மட்டும்
முனைப்பைக் காட்டுங்கள்!
அநாகரிகம் என்பது -
அவர்கள் வழியாக வேண்டுமானால்
இருந்து விட்டுப் போகட்டும்!
அது நம் வழியாக
ஒரு போதும் ஆகிட
அனுமதித்து விடவே கூடாது!

Comments