பண்பாட்டு விஷயங்களையே பகிர்ந்து கொள்வோம்!

நம்பிக்கை சார்ந்த விஷயங்களை - அழகான முறையில் வேண்டுமானால் - நண்பர்களுக்கு மத்தியில் கலந்துரையாடிக் கொள்ளலாம். முக நூலில் அல்ல!

வணக்க வழிபாடுகள் சார்ந்த விஷயங்களைக் கூட - தேவைப்படின் - அது போலவே கலந்துரையாடுவதில் தவறு இல்லை! ஆனால் ஒப்பீடுகள் தவிர்க்கப் படல் வேண்டும். பெருமைப் பட்டுக் கொள்ளக் கூடாது.


மார்க்க சட்ட திட்டங்கள் விஷயங்களில் கூட விவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.


மேற்கூறிய மூன்று விஷயங்களையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் -

எந்த இறையியல் சார்ந்தவர்களுடனும்

எந்த இறையியலையும் சார்ந்திராதவர்களுடனும்

கலந்துரையாடுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும்

அத்தியாவசியத் தேவை இருப்பது ஒன்றே ஒன்று தான்!

அது தான் "பண்பாட்டியல்"!

எல்லா இறையியலிலும் பண்பாடுகள் உண்டு!

இறையியல் சாராதவர்களுக்கும் பண்பாடுகள் உண்டு!

பண்பாடுகள் அனைத்தும் பொதுவானவை!

பரந்து பட்ட உலகெங்கிலும் பகிர்ந்து கொள்ளக் கூடியவை!

அவை அவசியமானவையும் கூட!

இன்றைய சூழலில் அவசரமானதும் கூட!

பன்மைத்துவத்துக்குப் பொருத்தமானதும் கூட!

Comments