நமக்கென்று ஒரு பண்பாடு உண்டு!

ஒரு முஸ்லிம் -

பிற சமய நம்பிக்கைகளைக் கேலி பேசலாமா?

அவர்களது கடவுளர்கள் குறித்து கிண்டலடிக்கலாமா?


ஒரு பகுத்தறிவாளர் -

பிற சமய நம்பிக்கைகளைக் கேலி பேசும்போது

அல்லது பிற சமயக் கடவுளர்கள் குறித்து கிண்டலடிக்கும் போது,

ஒரு முஸ்லிம் அதனை ரசிக்கலாமா?

முகநூலில் அது போன்ற பதிவுகளுக்கு விருப்பமோ பகிர்வோ செய்யலாமா?

முஸ்லிம்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் -

பகுத்தறிவுப் பேச்சாளர்கள் பேசிடும்போது,

பிற சமய நம்பிக்கைகள் குறித்துப் கேலி பேசவோ,

அவர்களது கடவுளர்கள் குறித்து கிண்டலடிக்கவோ அனுமதிக்கலாமா?

கடந்த காலங்களில் -

இது போன்ற தவறுகளை நாம் செய்து வந்தோமா? இல்லையா?

இனி வரும் காலங்களிலாவது -

இவ்வாறு நடைபெறாமல் நம்மைத் திருத்திக் கொள்வோமா? திருந்த மாட்டோமா?

Comments