நவீன இஸ்லாமிய சிந்தனைக்கு வழி விடுங்கள்!

இஸ்லாத்துக்குச் சீர்திருத்தம் என்பது தேவையில்லை!


ஆனால் -

இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள மறுக்கின்ற

முஸ்லிம்களின் "அறிவு" தான்

சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்!


**

கருத்து வேறுபாடுகளுக்கு வாய்ப்பே இல்லாத

உறுதி செய்யப்பட்ட கருத்துகளும் உண்டு இஸ்லாத்தில்!

கருத்து வேறுபாடுகளுக்கு இடம் அளிக்கின்ற

அறிஞர்களின் ஆய்வு வேண்டி நிற்கின்ற விஷயங்களும் உண்டு இஸ்லாத்தில்!

இதனைக் கூடப் புரிந்து கொள்ளாதவர்கள்

அல்லது புரிந்து கொள்ள மறுப்பவர்களின்

"அறிவு" தான் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்!

**

இஸ்லாம் - மனித குலத்தின் வாழ்க்கைப் பயணத்தோடு பின்னிப் பிணைந்தது

என்ற அடிப்படைக் கோட்பாட்டை புரிந்து கொள்ள மறுக்கின்ற

"அறியாமை" தான் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்!

**

இஸ்லாம் - அது நடைமுறைப்படுத்தப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப

அது தன் முன்னுரிமைகளில் நெகிழ்வைக் கடைபிடிக்கும் என்ற

எளிமையான உண்மையைக் கூட புரிந்து கொள்ளாமல் அடம் பிடிக்கின்ற

"முயலுக்கு மூன்று கால்" அறிஞர்களின் "மூளைகள்" தான்

சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்!

**

சீர்திருத்தம் தேவைப்படும் முஸ்லிம்களின் அறிவுக்கான கேள்விகள் இதோ:

மதுவை ஏன் அல்லாஹ் மதீனாவில் வைத்து தடை செய்தான்?

உத்மான் (ரளி) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு இரண்டு அழைப்பு என மாற்றிய போது ஏன் மற்ற நபிதோழர்கள் அதனை மறுக்கவில்லை?

நபியவர்களே தொகுக்காத திருக்குர்ஆனை - அபூபக்ரும் உமரும் சேர்ந்து தொகுத்ததை ஏன் - குல்லு பித் அத்துன் லளாளத் என்று ஏன் யாரும் சொல்லவில்லை?

உமர் (ரளி) அவர்கள் திருடனுக்குக் கை வெட்டும் சட்டத்தை - நிறுத்தி வைத்தபோது - இஸ்லாத்தை "சீர் திருத்தம்" செய்திட யார் இந்த உமருக்கு அதிகாரம் தந்தது என்று ஏன் யாரும் கேள்வி எழுப்பிடவில்லை?

**

இக்கேள்விகள் விவாதத்துக்காக அல்ல!

சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பதற்காக!

குறுக்குக் கேள்விகள் கேட்டு திசைதிருப்பிடப் பார்க்காதீர்கள்!

Comments