மனிதனின் தனித்தன்மைகள்!

ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் இறைவனால் வழங்கப்பட்டிருக்கும் தனித்தன்மைகளுள் முதன்மையானது - ஒன்றைத் தேர்வு செய்திடும் சுதந்திரம்! அதாவது - Freedom of choice! இதனை மறுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது!

அடுத்து ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் இறைவன் வழங்கிய தனித்தன்மைகளுள் இரண்டாவது - அறிவு! - Intellect and Intellignece! மனிதனுக்கு நாமே கற்றுக் கொடுத்தோம் என்கிறான் இறைவன். அறிவு கொடுக்கப்பட்டதன் நோக்கம் - ஒன்றைத் தேர்வு செய்திட அவனுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை - தன் அறிவைக் கொண்டு பயன்படுத்தி செயல்படத் தான்!

மூன்றாவது ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் இறைவன் வழங்கிய தனித்தன்மை - கண்ணியம் ஆகும். Dignity of mankind. இந்த கண்ணியத்தில் கை வைத்திடவும் உலகில் எவருக்கும் அனுமதி இல்லை! முதல் மனிதனாகிய ஆதத்தின் மக்களை நாமே கண்ணியப் படுத்தினோம் என்கிறான் இறைவன்.

எனவே -

ஒன்றைத் தேர்வு செய்திடும் சுதந்திரம் - எல்லா மனிதர்களுக்கும் சொந்தமானது!

அறிவாற்றலும் புத்திக் கூர்மையும் எல்லா மனிதர்களுக்கும் சொந்தமானது!

கண்ணியமும், மதிப்பும் - எல்லா மனிதர்களுக்கும் சொந்தமானது!

#மனிதனை அறிவோம்

Comments