அழைப்புப் பணி! - ஒரு மறு பரிசீலனை!

அழைப்புபணி என்றால் என்ன?

அழைப்புப்பணி என்பது தொடர்ச்சியாக செய்திட வேண்டிய பணியா?

அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப முற்படுத்தி அல்லது பிற்படுத்தி செய்திட வேண்டிய பணியா?

அபிஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்த நபித்தோழர்கள் அங்கே அழைப்புப்பணி செய்தார்களா?மதினாவில் யூதர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்குப் பிறகு - அவர்களுக்கு மத்தியில் தொடர்ந்து அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட்டதா?

மக்காவின் வெற்றிக்குப் பின் மக்காவிலும் அதனைச் சுற்றிலும் அழைப்புப்பணி தொடரப்பட்டதா?

***

இன்றைய சூழலில் - முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இடங்களில் அழைப்புப்பணியை முற்படுத்துவது நல்லதா? அல்லது பிற்படுத்துவது நல்லதா?

பேராசிரியர் தாரிக் ரமளான் மக்களை "மதம் மாற்றுவது" நமது வேலையே அல்ல என்கிறார். சரிதானா?

ஜாபர் பங்காஷ் எனும் ஆய்வாளர் - "நம் வீட்டை சுத்தப்படுத்தி வைக்காமல் விருந்தினர்களை அழைப்போமா?" என்று கேட்கிறார். சரிதானா?

இலங்கையிலும் தமிழகத்திலும் - நடைபெறும் வெவ்வேறு விதமான அழைப்புப்பணி முறைகளும் சுன்னத்தான முறைகள் தானா?

அழைப்புப்பணியில் ஹிக்மத் என்பது என்ன?

அழைப்புப்பணி எனும் பெயரில் இன்று நடக்கும் விவாதங்கள் - அழகிய உபதேசம் - எனும் வரையறைக்குள் வருமா?

முஸ்லிம்களின் அழகிய பண்புகளால் மக்கள் கவரப்பட்டு அவர்கள் தாமாகவே இஸ்லாத்தை நோக்கி வருவதே இஸ்லாமிய வரலாறு கற்றுத்தரும் பாடம் என்பது சரிதானா?

இன்றைய சூழலில் - இஸ்லாஹ் எனும் சீர்திருத்தத்தை முற்படுத்துவோம்; அழைப்புப்பணியை பிற்படுத்துவோம் என்பது எனது பணிவான கருத்து. உங்கள் கருத்தென்ன?

Comments