இதுவே அவனது கடைசித் திருட்டாக அமையட்டும்!

இது யாஸ்ஸிர் ஃபஸாஃகா என்ற இஸ்லாமிய அறிஞரின் உரையிலிருந்து:

ஒரு தடவை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கடைவீதிக்குச் சென்றிருந்தார்களாம்.

பொருள்களை வாங்கியதும் தான் கவனிக்கிறார்கள் - பணப்பையை யாரோ திருடி விட்டார்கள் என்று!


ஒரு பெரிய நபித்தோழரிடமே திருடி விட்டார்களா என்று அருகில் இருந்த கடைக்காரர்கள் அனைவரும் கூடி விட்டார்களாம்.

எல்லாரும் அந்தத் திருடனைச் சபிக்கத் தொடங்கினார்களாம்.

அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இருகரம் ஏந்தி என்ன துஆ செய்தார்கள் தெரியுமா?

"யா அல்லாஹ்! எனது பொருளைத் திருடியது வறுமையின் காரணத்தினால் என்றால் - என்னிடம் அவன் எடுத்துக் கொண்டதில் அவனுக்கு பரக்கத்தை (அபிவிருத்தி)  அளிப்பாயாக! ஆனால் - அந்தத் திருடனுக்கு தொழிலே திருடுவது தான் என்றால் - இதுவே அவனது கடைசித் திருட்டாக அமையட்டும்!"

இதில் நாம் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள்:

1. நம்மிடம் திருடிய திருடனுக்கு நாம் இரக்கம் காட்டிடத் தேவையில்லை தான். ஆனால் அவனது அபிவிருத்திக்கு துஆ செய்யும் மனம் நபித்தோழருடையது.

2. து ஆவை கவனியுங்கள். இதுவே கடைசித் திருட்டாக இருக்கட்டும் என்பதன் பொருள் என்ன? இது எப்படி நிறைவேறும்? ஒன்று: அவன் -"நமக்காக அவர் துஆ செய்தாரா?" என்று வியந்து திருந்தி விடலாம். இரண்டு: திருடன் சிக்கி தண்டனை பெற்று - அவன் திருட முடியாமல் போகலாம். கவனிக்க வேண்டியது என்னவெனில் - திருடனுக்குத் தண்டனை வழங்கும் அல்லாஹ்வுடைய சட்டத்தில் நபித் தோழர் தலையிடவில்லை என்பது தான்!

Comments