உலமாக்கள் என்றால் யார்?

ஆலிம் / உலமா என்பதற்கு ஜமீல் அஹ்மத் சாஹிப் அவர்கள்

கொடுத்த விளக்கம்.

அது 1984 - ம் ஆண்டு. சமரசம் இதழுக்கு சிறுகதை ஒன்றை

அனுப்பியிருந்தேன். அது உடனேயே சமரசம் இதழில்

இடம்பெற்றது. அது மவ்லானா மவ்தூதி அவர்களின் மேற்கோள்

ஒன்றை வைத்து எழுதப்பட்ட கதை. அதைத் தொடர்ந்து ஒரு

தடவை சென்னை ஜமாஅதே இஸ்லாமி அலுவலகத்துக்கு

முதன்முறையாகச் சென்றிருந்தேன்.


அங்கே சென்றதும், "ஜமீல் சாப்" உங்களைப் பார்க்க

அழைக்கிறார் என்று அழைத்துச் சென்றார்கள். ஜமீல் அஹ்மத்

சாஹிப் அவர்கள் என்னைக் குறித்து விசாரித்தார்கள்.

என்ன படித்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள்.

B.Sc., வேதியியல் என்று சொன்னேன்.

அப்படியா, அப்படியெனில், நீங்கள் ஒரு ஆலிம் தான் என்றார்.

நான் ஆலிமுக்குப் படிக்கவில்லையே" என்றேன்.

"தம்பி, ஒரு குர்ஆன் மொழிபெயர்ப்பு நூல் கொண்டு வாருங்கள்"

என்றார்.

வந்ததும் சூரத்துல் பாத்திர் 27-28 வசனங்களின்

மொழிபெயர்ப்பைப் படித்திடச் சொன்னார்கள்.

"நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை

நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல

விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம்.

மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள்

பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய

நிறமுடையவும் உள்ளன.

"இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால்

நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக

அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் -

ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும்

மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்." (35:27-28)

அந்த வசனங்கள் சுட்டிக் காட்டும் - மழையைப் பற்றி, கனிகளை

வழங்கிடும் தாவரங்களைப்பற்றி, மலைகளைப் பற்றி,

மனிதனைப்பற்றி, விலங்கினங்களைப் பற்றி  - யாரெல்லாம்

தங்கள் அறிவை வளர்த்துக் கொள்கிறார்களோ அவர்களைத்தான்

"உலமா" என்று சொல்கிறான் இறைவன் என்பதை ஜமீல் சாஹிப்

அவர்கள் எனக்கு விளக்கினார்கள்.

இதே கருத்தையே இப்போது ஷெய்ஃக்  ரிஷாட் நஜிமுதீன்

அவர்களும் முன் வைத்திருக்கிறார்கள்.

Comments