முன்னுரிமை!

உனது எதிரியின் மிகச் சிறந்த "ஆயுதமே"

உனது முன்னுரிமைகளை

மாற்றி விட்டு விடுவது தான்!

- பேராசிரியர் தாரிக் ரமளான்**


The best means of your enemy...

Is to change your priorities!

- Prof Tariq Ramadan


**

கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க....

அவசியமல்லாத விஷயங்களின் பக்கம் நம் கவனத்தைத் திருப்பி விட்டு, அவசியமான பணிகளில் நாம் ஈடுபட்டு விடாமல் பார்த்துக் கொள்வதே எதிரிகளின் மிகச் சிறந்த "வியூகம்".

இதற்கு இப்போதெல்லாம் எதிரிகளே தேவையில்லை. நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று நம்மில் பலரும் முடிவெடுத்து விட்டாற்போல் தான் தெரிகிறது. இன்றைய நிலவரமே இதற்குச் சான்று!

உதாரணமாக - சூனியம் எனும் விஷயம் இப்போது முன்னுரிமை கொடுத்து பேசப்பட வேண்டிய விஷயமா, சொல்லுங்கள்?


என்னைக் கேட்டால், உலக அளவில் திட்டமிடப்பட்டு, நிறுவனமயப் படுத்தப்பட்டு, பரப்பப்படுகின்ற இஸ்லாமிய வெறுப்பினை (ISLAMOPHOBIA) அறிவு ரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என்பதே நாம் அனைவரும் முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்திட வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்று சொல்வேன். அமெரிக்க முஸ்லிம் அறிஞர்களில் பலர், இதனை எதிர்கொள்வது எப்படி என்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஆனால் நாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றோம்?

Comments