பங்களிப்புகளில் மிகச் சிறந்தது எது?


அல் அஸ்ஹர் பல்கலைக் கழகம் கி பி 975  ல் துவக்கப்பட்டது. அதற்குப் பின் இந்த 1042 வருடங்களில், எத்தனைப் பல்கலைக் கழகங்களை நாம் உருவாக்கியுள்ளோம்?  

நமது இந்தியாவை முகலாய சக்கரவர்த்திகள்  ஆண்டார்கள். அவர்கள் எவைகளைக் கட்டியெழுப்பினார்கள்?

ஹுமாயுன் கல்லறை, பதேஃபூர் சிக்ரி எனும் கோட்டை நகரம், ஹிரான் மினார், தாஜ் மஹால் போன்ற நினைவுச் சின்னங்களைத் தான். அதுவும் அரசு கருவூலத்தையெல்லாம் வாரி இரைத்து! ஏன் ஒரே ஒரு பல்கலைக் கழகம் கூட கட்டியெழுப்புவது பற்றி அவர்கள் சிந்தித்திடவில்லை? 

நாம் இங்கே - முகலாய மகாராணிகளுக்கு நினைவுச் சின்னங்களை எழுப்பிக் கொண்டிருந்த சமயத்தில் தான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் / ஹார்வர்டு கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை அங்கே உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் மேற்கத்தியர்கள்.  

**

சரி, அவைகளெல்லாம் பழங்கதைகள்!

இன்று நம் நிலை என்ன? 

கல்லூரி நிறுவனர் ஒருவர் சொல்கிறார்: ஒரு வருடத்தின் ஒரே ஒரு திருமண "சீசனில்",  நான்கைந்து முஸ்லிம் கிராமங்களில் - திருமண விருந்துக்கென்று மட்டும் நாம் செலவழித்த தொகை ஐந்து கோடி ரூபாய்!

தின்று கெட்டான் ..........  என்பது உண்மை தானோ? 

அடுத்த தலைமுறையே! கொஞ்சம் சிந்தியுங்கள்!

உங்கள் பெற்றோர் விட்டுச் செல்கின்ற சொத்துக்களில் ஒரு பகுதியை - கல்வி நிறுவனங்கள் உருவாக்கிட என்று திருப்பி விட்டு விடுங்கள். புண்ணியமாய்ப் போகும்!

Comments