உணர்வெழுச்சி விவேகம்! - பதிவு 1


உணர்வுகளும் உணர்ச்சிகளும் வலிமை மிக்கவை.

அவை ஆக்கவும் வல்லவை. அழிக்கவும் வல்லவை.

அன்பு, இரக்கம், பாசம், விருப்பம், ஆர்வம், உற்சாக, மகிழ்ச்சி, கவலை, கோபம், வெறுப்பு, பயம், – போன்றவை நமது உள்ளத்தில் இயல்பாய் எழுகின்ற உணர்வுகள் ஆகும்.

நமது உணர்வுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அவசியமும் ஒரு மதிப்பும் இருக்கிறது.

இரக்க உணர்வு – ஏழைகளுக்கு உதவிட மனிதனைத் தூண்டுகிறது.

ஒரு காரியத்தில் தோல்வி அடைந்த ஒருவனைத் தொடர் முயற்சியில் ஈடுபட வைப்பது எது? ஆர்வம் எனும் அவன் உணர்ச்சிகளே!தன் குடும்பத்துக்காக ஒருவனைத் தியாகம் செய்ய வைப்பது எது? பாசம் காட்டும் அவன் உணர்வுகளே!

ஆபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டு விடுவோமோ என்ற பய உணர்ச்சி தான் தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாத்திடுகின்ற செயல்பாடுகளில் ஒருவனை ஈடுபட வைக்கிறது!

தன் கண் முன்னே ஒரு தீமை அரங்கேறிக் கொண்டிருக்கும் போது, அதனைத் தட்டிக் கேட்கின்ற துணிவைத் தருவது கோபம் எனும் உணர்ச்சியே!

ஆனால் இந்த உணர்வெழுச்சியை மிகக் கவனமாக நாம் கையாள வேண்டியுள்ளது! இல்லையெனில் விளைவுகள் பாரதூரமானவை!

மீள் பதிவு

Comments