சிந்திக்க மறுப்பவர்களுக்கு மட்டும்!


அல்-குர்ஆன்

காலத்தோடு பயணிக்கக் கூடிய

ஒரு நூல் என்பதை

முஸ்லிம்கள் புரிந்து கொள்ளாத வரை -


எப்பிரச்னையையும் அவர்களால்

எதிர்கொண்டிட முடியாது!

**

அல் குர் ஆனில் - ஒரே வரலாறு

அல்லது ஒரே சம்பவம்

அல்லது ஒரே ஒரு விஷயம் கூட

ஏன் திரும்பவும் திரும்பவும் சொல்லப்படுகிறது

என்பதைப் புரிந்து கொள்ளாத வரை

முஸ்லிம்கள் எந்த ஒரு உருப்படியான

பாடத்தையும் கற்றுக் கொள்ளப் போவதில்லை!

**

நபி (ஸல்) அவர்களிடம்

பலராலும் கேட்கப்படுகிற

ஒரே விதமான கேள்விக்கு

அவர்கள் ஒவ்வொருவருக்கும்

ஒவ்வொரு விதமான

பதில்களைத் தந்தது ஏன்

என்பதைப் புரிந்து கொள்ளாத வரை

முஸ்லிம்களால்

இந்த சமூகத்தை ஒரு போதும் சீர்திருத்திட

இயலாது!

Comments