தொழுகை தரும் வெற்றி - பற்றிய கருத்துகள்!


அம்மாபட்டினம் தாருஸ் ஸலாம் பள்ளியிலும், அன்னை கதீஜா அறிவியல் கலை மகளிர் கல்லூரியிலும்  இந்த 2017 ஜூன் மாதம் நடைபெற்ற - தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி - எனும் ரமளான் சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்ட பள்ளி / கல்லூரி மாணவிகளின் கருத்துகளில் சில:

இந்த பயிலரங்கத்துக்கு வருவதற்கு முன்னால் தொழுகையை அவசரமாகவும் கடமைக்காகவும் தொழுது கொண்டிருந்தோம். இந்த வகுப்பிற்கு பிறகு தொழுகையின் முக்கியத்துவமும் அதை வாழ்வில் செயல் படுத்த வேண்டும் என்றும் அறிந்து கொண்டோம். (X Students)


இப்பயிலரங்கம் பயனுள்ளதாக இருந்தது. கவனம் ஈர்க்கப்பட்டது. கற்றுக் கொண்டது மனதில் ஆழமாகப் பதிந்தது. அறிவை மேம்படுத்த கூடிய ஒரு வகுப்பாக இருந்தது. கற்றுக் கொண்ட விஷயங்கள் செயல்படுத்த ஆர்வம் ஏற்பட்டது. தொழுகை நம் வாழ்க்கையில் எவ்வாறு இணைக்கப்பட்டிருப்பதை அறிந்து கொண்டோம். இறை நம்பிக்கை அதிகம் ஏற்பட்டுள்ளது. (XII Students)

இப்பயிலரங்கத்தில் நீங்கள் கற்றுத் தந்தது, ஆழமாக உள்ளுக்குள் பதிந்தது. நீங்கள் வகுப்பு நடத்திய விதம் புதுமையாகவும், நேர்த்தியாகவும் இருந்தது. நிறைய குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாக வைத்து விளக்கியதால் நன்றாக புரிந்தது. நிறைய அறிஞர்களையும், புத்தகங்களையும் நீங்கள் அறிமுகப் படுத்தினீர்கள். அதன் மூலம் நாங்கள் மேலும் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. குர் ஆன் வசனங்களை ஆழமாக உணர்ந்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொண்டோம். தொழுகை ஏன் வெற்றியை அளிக்கிறது என முழுமையாக உணர்ந்து கொண்டோம். (XII Students)

*

தொழுகை பற்றி நாங்கள் ஆழமாக உங்களிடமிருந்து கற்றுக் கொண்டோம். தொழுகையுடன் இணைக்கப்பட்டவை பற்றியெல்லாம் தெளிவாக கற்றுக் கொண்டோம். தொழுகையின் சிறப்பை அறிந்து கொண்டதினால், அதிகம் தொழ வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. தொழுகை பற்றி அதிகம் அறிந்து கொண்டதினால், அதனைப் பற்றிய தேடல் எங்களிடம் அதிகமாகி விட்டது. எனவே மேலும் உங்களின் வகுப்பை அதிகமாக எதிர்பார்க்கிறோம். (BA English I Year)

*

தொழுகையை அலட்சியமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு அதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ். சொர்க்கத்தின் சாவியான சலாத் மனித வாழ்க்கைக்கு மொத்த வெற்றியையும் தரும் என்பதை இப்பயிலரங்கத்தில் நாங்கள் கற்றுகொண்டோம். தொழுகையின் முழு நன்மையையும் உங்களது  பயிலரங்கத்தின் மூலம் அறிந்து கொண்டேன். சுப்ஹானல்லாஹ். வாழ்க்கைக்குத் தேவையான ஒட்டு மொத்த வெற்றியையும், (அல்லாஹ்வோடு உரையாடுகிறோம் என்ற பயத்துடனும், பொறுமையுடனும் ஈருலக வாழ்க்கைக்கு வெற்றியைத்) தருவது தொழுகை ஒன்று மட்டுமே என்பதை அல்ஹம்து லில்லாஹ் அறிந்து கொண்டேன். (B.Com I Year student)

*

எங்களை எளிமையான முறையில் கையாண்டு எங்களுக்கு புரியுமாறு செய்தீர்கள். (பயிலரங்கம்) எங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துமாறு செய்தது. சலிப்பு இல்லாமல் தொடர்ந்து கேட்கும்படி இருந்தது. இது வரைக்கும் நாங்கள் பார்த்ததில் இது வித்தியாசமாக இருந்தது; இன்னும் ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கமாக அறிய ஆவலாக இருக்கிறேன்.

இப்பயிலரங்கம் தொழுகையை கவனித்து தொழுமாறு செய்தது; தொழுகையை நாம் நம் வாழ்வில் கொண்டு வந்தால் அதனால் ஏற்படும் வாழ்வியல் நன்மைகளை அறிந்தோம்; தொழுகையுடன் தொடர்புடையவற்றை அறிந்தோம்; தொழுகையை தவறாமல் தொழ வேண்டும் என எண்ணம் பிறந்தது. (B.Sc., Nutrition & Dietetics I year student)

*

நீங்கள் வகுப்பு நடத்தும் விதம் எங்கள் கவனத்தை சிதற விடாமல் மேலும் பயில வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்தது. மார்க்கத்தை பற்றி பயில வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த எங்களுக்கு உங்கள் வகுப்பு மிகவும் பயனளிப்பதாக அமைந்தது. இது மாதிரி வகுப்பில் பங்கு பெறாத எங்களுக்கு இந்த வகுப்பு புது அனுபவமாகவும் அனைத்து விஷயத்தையும் ஆய்வு செய்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தது. அல்ஹம்துலில்லாஹ்!

தொழுகையில் இணைக்கப்பட்ட விஷயங்களை அறிந்து கொண்டோம். அவற்றை வாழ்க்கையில் எவ்வாறு நடைமுறைப் படுத்தி வெற்றி பெற முடியும் என்பதையும் அறிந்து கொண்டோம். (B A History I Year)

*

தொழுகையின் முக்கியத்துவம் பற்றியும், அதனுடன் இணைக்கப்பட்ட பல விஷயங்கள் பற்றியும் கற்றுக் கொண்டோம். தொழுகை ஒரு சடங்கு அல்ல எனக் கற்றுக் கொண்டோம். நீங்கள் தொழுகை பற்றி கூறிய பிறகு என்னால் இப்பொழுது தொழுகாமல் இருக்க முடியவில்லை. தொழுகையில் interest உடன் தொழ வேண்டும் எனக் கற்றுக் கொண்டோம். (I Year B.Sc Mathematics )

*

உங்களுடைய கேள்விகள் எங்களை சிந்திக்க வைத்தது. தொழுகையில் இத்தனை விஷயங்கள் இருப்பதை அறிந்தோம். தொழுகையுடன் இணைக்கப்பட்ட பல விஷயங்களை கற்றுக் கொண்டோம். தொழுகை வாழ்வியலுடன் இணைக்கப்பட்டதை கற்றோம். குர் ஆன் பற்றிய ஆய்வுகளைக் கற்றுக் கொண்டோம். (B.Sc., Psychology I Year )

*

உங்களுடைய இந்த வகுப்பு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் நடத்தியதில் நிறைய விஷயம் School Stage - லேயே கிடைத்திருந்தால் அந்த வளரும் பருவத்திலேயே character wise நிறைய changes இருந்திருக்கும் என்று நினைக்கிறோம். இந்த பயிற்சியின் மூலம் பலவித மாற்றங்கள் அடைந்துள்ளோம். (II Year B.Com students)

*

தொழுகையை மேலாக தெரிந்திருந்தோம். இப்போது ஆழமாக தெரிந்து கொண்டோம். தொழுகை மறுமைக்கு மட்டுமல்ல, இம்மைக்கும் நிறைய பயன் தரும் என்று தெரிந்து கொண்டோம். (B A English II year)

*

இந்த பயிலரங்கத்தின் மூலம் அனைவரும் பயனடைந்தோம். தொழுகை பற்றியும் அதனால் கிடைக்கும் வெற்றியை பற்றியும் மிகவும் துல்லியமாக எடுத்துரைத்தமைக்கு நன்றி. தொழுகையை ஒரு கடமையாக மட்டும் பின்பற்றிய எங்களுக்கு இதன் மூலம் வெற்றியும் உண்டு என்பதை அறிந்து கொண்டோம். அதனை வாழ்க்கையில் கடைபிடிக்க ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. அல்லாஹ் என்னென்ன விஷயங்களை தொழுகையோடு இணைத்திருக்கிறானோ அதனை கடைபிடித்தால் வெற்றி என்பதை கற்றுக் கொண்டோம். (II Year B.A. English)

*

உங்களுடைய நடத்தும் விதம் மிகவும் பிடித்துள்ளது. ஆனால் நேரம் மிக குறைவாக இருந்தது. நாங்கள் உங்களிடம் நிறைய விஷயங்கள் எதிர்பார்க்கிறோம். உங்களின் வகுப்பு மூலம் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். Khushu - வை பற்றி தெளிவாக அறிந்து கொண்டோம். (II Year B.A History)

*

Respected Sir, Your class was fantabulous. It was very interesting and your teaching was very much effective. The topic was very interesting and it was very different. Till today, we felt salaat as only a spirituality aspect. But you made us to feel the salaat – spiritually, physically, mentally, intellectually, and emotionally too. Alhamdu lillah. This class has a great impact on our mind about SALAAT. And we learned many Quranic root words also. May Allah give you more wisdom. (B.Sc., Psychology II Year)

*

அல்ஹம்து லில்லாஹ்! உங்களுடைய வகுப்புகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தது. அனைவரும் புரிந்து கொள்ளவும், கருத்துகளை விளங்கிக் கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. அதன் சிறப்பம்சம் தெரியாத நிறைய விஷயங்களை உங்களுடைய வகுப்பில் தெரிந்து கொள்ள முடிந்தது. தொழுகை மற்றும் அதன் சிறப்பம்சங்களும், அது மனித வாழ்க்கையோடு எவ்வாறு அல்லாஹ் அதை இணைத்து வைத்திருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டோம். மேலும், மனித வாழ்க்கையில் ஏற்படக்கூடிய உள்ளம் ரீதியான பிரச்னைகளையும் அதை தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்தோம். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை அறிவியல் ரீதியாக அன்றே அல்லாஹ் கூறியிருப்பதைக் கண்டு வியக்கிறோம். (II B.Sc., Nutrition & Dietetics)

*

பல்வேறு உதாரணங்களை நீங்கள் முன்னெடுத்து வைத்தீர்கள். இது நாங்கள் எளிதில் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. இந்த மாதிரியான வகுப்பு எங்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறது. தெரியாத விஷயங்களை நாங்கள் அதிகம் கற்றுள்ளோம். நாங்கள் இந்த வகுப்புகள் மூலமாக தொழுகையை முழுமையாக மற்றும் கவனம் சிதறாமல் எப்படித் தொழுவது என்றும் கற்றுக் கொண்டுள்ளோம். நாம் தொழுவது மட்டுமல்லாமல் மற்றவர்களை தொழுகைக்கு எப்படி அழைப்பது என்று கற்றுக் கொண்டோம். (II Year B.Sc., Computer Science)

*

இந்த வகுப்பு எங்களுக்கு அதிகமாக இருத்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நீங்கள் நடத்திய முறை மிகவும் புரியும் விதத்தில் இருந்தது. இன்னும் நிறைய தகவல் அறிய ஆவலாக உள்ளது. இந்த வகுப்பு எங்களுக்கு அதிக நன்மை செய்யும் விதத்தில் உள்ளது. பொறுமை என்பதை விளக்கமாக தெரிந்து கொண்டோம். உள்ளச்சம் மற்றும் இறையச்சம் பற்றிய விளக்கம் தெளிவாக புரிந்தது. (BSc., Maths II Year)

*

தொழுகையில் – Khushu -வை உணர்ந்தோம். கவன சிதறல் குறைந்து விட்டது. தொழுகாத நண்பர்களுக்கு தொழ சொல்லி எத்தி வைக்க ஆர்வம் இருக்கிறது. தொழுகையின் முக்கியத்துவம் தெரிந்தது. புரிந்தது. சுவர்க்கத்தை பற்றி சொன்னவுடன் தொழுகையை விட்டுவிடத் தோன்றவில்லை. (B.A. English III Year)

*

இந்த பயிலரங்கத்தின் தேவை எங்களுக்கு இன்னும் அதிகமாக உள்ளது. நீங்கள் அணுகிய முறை, எங்களுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. உங்களுடைய நேர மேலாண்மை சரியாக இருந்தது. நடைமுறை மற்றும் கடந்த கால உதாரணங்களை இணைத்துக் கூறியது நன்றாக இருந்தது. நாங்கள் அலட்சியமாக இருந்த விஷயங்களில் எங்களுக்கு ஆர்வமூட்டியது இப்பயிலரங்கம். நேர்மறை சிந்தனையை வளர்த்தது. வாழ்க்கையில் வெற்றி பெற வழி கிடைத்தது. ஒரு வார்த்தையின் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதால் அது சொல்ல வரும் முழு அர்த்தமும் புரிகிறது. (B.Sc., Maths III Year)

*

Passionate Motivator. It is very useful and interesting. It is really more useful for our future. We learnt how to observe (tadabbur) the Quran. Presentation through slides is more effective. (B.Com III Year)

*

எங்களுடைய மனநிலைக்கு ஏற்றாற்போல் இப்பயிலரங்கம் அமைந்தது. எங்களுடைய சம வயது நண்பர்களுக்கு எடுத்து கூறும்படியாக அமைந்தது. இஸ்லாத்தில் அமல்கள் மறுமைக்கு மட்டுமின்றி இம்மைக்கு பயனளிக்கிறது என்பதை அறிந்து கொண்டோம். எங்கள் அனைவருக்கும் நேர்மறை சிந்தனை அதிகரித்துள்ளது. பல உளவியல் நோய்களுக்கான ஆலோசனைகள் தொழுகையிலே உள்ளது என்பதை அறிந்து கொண்டோம். கடைசியில் சுவர்க்கம் பற்றி கூறியது தொழுகையை சரியாக பேண ஆர்வத்தை ஊட்டியது. தொழுகையை குறித்து எங்களுடைய கண்ணோட்டம் மாறியுள்ளது. (B.Sc., Psychology III Year)

***

Comments

Post a Comment