அழகான முறையில் விலகி விடுங்கள்!ஒருவரை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

ஒருவருக்கு உங்களைப் பிடிக்கவில்லையா?

ஒருவர் தொடர்ந்து உங்களுக்குத் தொந்தரவு தருகிறாரா?

ஒருவர் உங்களிடம் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொள்கிறாரா?

தீர்வு என்ன?


அழகான முறையில்

அவரிடமிருந்து விலகி விடுங்கள் என்கிறான்

கிழக்குக்கும் மேற்குக்கும் சொந்தக்காரனான

உங்கள் இறைவன்!

பார்க்க: குர்ஆன்  73: 9-10

"அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்;

அவனைத் தவிர வேறு நாயனில்லை;

ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.

அன்றியும், அவர்கள் கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக;

மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக!"

Comments