இறை சிந்தனை! நபி வழியில்!!


இறை சிந்தனை! நபி வழியில்!!

பாடம் 1:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

"சொல்வதற்கு இலகுவானது
மீஸான் தராசில் கனமானது
அருளாளன் அல்லாஹ்வுக்கு விருப்பமானது
இந்த இரு சொற்களாகும்:



சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி
சுப்ஹானல்லாஹில் அளீம்". (நபிமொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

பாடம் 2:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி

- என்று யார் ஒருவர் காலையில் 100 தடவையும் மாலையில் 100 தடவையும் ஓதி வருகிறாரோ.....



 அவர் - கியாமத் நாளில் அடைகின்ற நன்மைகளை, அதே போன்று அல்லது அதை விட அதிகமாக ஓதி வருபவர்களைத் தவிர வேறு யாரும் அடைந்திட முடியாது. (நபிமொழி ஆதார நூல்: முஸ்லிம்)

பாடம் 3:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

ஃதிக்ர்களில் சிறந்தது - லா இலாஹ இல்லல்லாஹ் - என்பதாகும். (நபிமொழி ஆதார நூல்: திர்மிதி)

பாடம் 4:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

ஒவ்வொரு (கடமையான) தொழுகைக்குப் பிறகும்

சுப்ஹானல்லாஹ் - 33 தடவை

அல்ஹம்துலிலாஹ் - 33 தடவை

அல்லாஹு அக்பர் - 34 தடவை

யார் ஓதி வருகிறாரோ அவர் ஒரு போதும் நிராசை அடைந்திட மாட்டார். (நபிமொழி ஆதார நூல்: முஸ்லிம்)

பாடம் 5:

"சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலிலாஹி

வ லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்."

- என்று நான் ஓதுவது கதிரவன் எந்தெந்தப் பொருள்கள் மீதெல்லாம் உதிக்கின்றதோ அவையெல்லாவற்றையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது- என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
அருளினார்கள். (நபிமொழி ஆதார நூல்: முஸ்லிம்)

பாடம் 6:

ஹள்ரத் அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்:

சுவனத்தில் உள்ள பெரும் சொத்துக்களில் ஒன்றை உமக்குச் சொல்லித் தரவா? என்று கேட்டார்கள்.

சொல்லித் தாருங்கள் யா ரஸூலுல்லாஹ் - என்று நான் சொன்னேன்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

அது தான் = "லா ஹவ்ள வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்"

(நபிமொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

பாடம் 7:

"லா இலாஹ இல்லல்லாஹு
வஹ்தஹு லா ஷரீக்க லஹு
லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து
வஹுவ 'அலா குல்லி ஷைஇன் கதீர்"

என்று ஒவ்வொரு நாளும் நூறு முறை ஓதி வருகிறாரோ, அவருக்கு
பத்து அடிமைகளை விடுதலை செய்த நற்கூலி உண்டு;
அவருக்காக நூறு நன்மைகள் எழுதப் படும்;
நூறு பாவங்கள் அவருக்கு நீக்கப் படும்;

இதனை ஓதிய நாள் மாலை வரை அவர் ஷைத்தானிடமிருந்து பாது காக்கப் படுவார்.

மறுமை நாளில் இதைப் போன்று ஓதியவரைத் தவிர வேறு யாரும் இவரை நன்மையில் மிஞ்சி விட முடியாது". (நபிமொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

என்ன, இறை சிந்தனையில் மூழ்கலாம் தானே! அனு தினமும்!!

***

Comments