பார்த்துப் பழகுவோம்!


நாம் ஒருவருடன் பேசுகின்றோம்.

அவருடன் பழகுகிறோம். பகிர்ந்து கொள்கின்றோம்.

அது "உளவியல் ரீதியானது" என்று மட்டுமே இது வரை

எண்ணி வந்திருக்கின்றோம்.

ஆனால் நமது நரம்பு மண்டல அறிவியல் (Neuroscience) ஆய்வுகள்

இன்னொரு செய்தியை நமக்குத் தருகின்றன!

அது என்ன?

**
உணர்வு ரீதியாக நாம் ஒருவருடன்

நேருக்கு நேர் பழகுகின்ற

ஒவ்வொரு சமயத்திலும்,

இருவரது மூளைகளும்

ஒன்றிணைக்கப் படுகிறதாம்!

Brain to brain link up!

இருவரது மூளைகளிலும்

நரம்பு மண்டல "இணைப்புகள்" (neural bridge)

உண்டாக்கப் படுகின்றதாம்!

அதனால் சுரக்கின்ற ஒரு சில "ஹார்மோன்கள்"

நமது இதயத்திலும் தாக்கம் ஒன்றை ஏற்படுத்துகின்றன!

நோய் எதிர்ப்பு செல்களிலும் அது தாக்கம் ஒன்றை ஏற்படுத்தி விடுகிறது!

**

நாம் பழகுகின்ற அந்த "உறவு"

நல்லதொரு உறவாக அமைந்திட்டால் (nurturing relationship)

நமது நோய் எதிர்ப்பு செல்கள்

பலப்படுத்தப் படுகின்றனவாம்!

அதனால் அவருக்கு  இரண்டு நன்மைகள்:

ஒன்று: அவர் ஆயுள் நீட்டிக்கப்படுகிறது!

இரண்டு: அவர் நோய்வாய்ப் பட்டால் விரைவில்

குணம் அடைந்து விடுகிறார்!

**

ஆனால் - நாம் பழகுகின்ற அந்த "உறவு"

கெட்டதொரு உறவாக அமைந்திட்டால் (torturing relationship)

நமது நோய் எதிர்ப்பு செல்கள்

பலவீனப்படுத்தப் படுகின்றனவாம்!

அவருக்கு  இரண்டு ஆபத்துகள்:

ஒன்று: அவர் ஆயுள் குறைந்து விடுகிறது!

இரண்டு: அவர் நோய்வாய்ப் பட்டால் அவரால் எளிதில்

குணம் அடைந்திட முடியாது!

**

இனி, நீங்கள் சிந்திக்கலாம்!

Comments