கல்வி என்பது கருணையோடு சம்பந்தப்பட்டது!


கல்வி என்பது

கருணையோடு

சம்பந்தப்பட்டது!

ஆசிரியர் ஒருவருக்கு

அவசியத் தேவை

இரக்கப்பண்பாகும்!

சிந்தனைக்கான இறைவசனம்

அத்தியாயம் 55

வசனங்கள் 1 - 4

இன்ஷா அல்லாஹ் இது குறித்து

மேலும் எழுதுவோம்.....

**

"ரஹ்மத்" எனும் அரபிச் சொல்லை

கருணை என்றோ

இரக்கம் என்றோ

மொழிபெயர்த்தல் போதாது

என்கிறார் முக்தார் மக்ரவி

எனும் அறிஞர்.

அவர் மொழிபெயர்ப்பது

இப்படித்தான்!

Merciful Love (or) Loving Mercy!

இதனைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?

இரக்கமான அன்பு அல்லது அன்பான இரக்கம்

என்று சொல்வது சற்றே சரியானது.

அதாவது வல்லோன் இறைவனை

நாம் "ரஹ்மான்" என்று நாம் சொல்லும்போது - அவன்

இரக்கத்தோடு அன்பு செலுத்துபவன் - அல்லது

அன்போடு இரக்கப் படுபவன் - என்று

புரிந்து கொண்டால் அது போதும்!

**

ஹிள்ர் (அலை) அவர்கள்

எப்படிப்பட்ட ஆசிரியர்

என்பது நமக்குத் தெரியும் தானே?

நபி மூஸா (அலை) அவர்களுக்கே

ஆசிரியராக விளங்கியவர்கள் அவர்கள்!

அவர்களைப் பற்றி அல்லாஹ்

என்ன சொல்கிறான் என்று பார்ப்போமா?

"அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்;

நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்;

இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து

கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.". (அத்தியாயம் 18 வசனம் 65)

இவ்வசனத்தில் இடம் பெற்றிருக்கும் இரண்டு சொற்கள்

ரஹ்மத் மற்றும் இல்ம்!

அதாவது

இரக்கம் மற்றும் அறிவாற்றல்!

வியப்பாக இல்லை?

**

இதே இறை வசனத்தில் மேலும் ஒரு பாடம் இருக்கிறது!

"அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்;

நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்;

இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து

கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.". (அத்தியாயம் 18 வசனம் 65)

கேள்வி ஒன்றைக் கேட்போம்:

என்ன காரணத்தினால் இறைவன் ஹிள்ர் (அலை) அவர்களுக்கு ரஹ்மத் எனும் கிருபையை அருளி விட்டான்?

அதற்கான பதில் இந்த வசனத்திலேயே இருக்கிறது!

அது என்ன?

அவரை "நமது அடியார்களில் ஒருவர்" என்று இறைவன் குறிப்பிட்டிருப்பதை கவனியுங்கள்!

என்ன பொருள்?

அதாவது இறைவனை வணங்கி வழிபடும் அடியார் அவர் என்பதனால் அவருக்கு

இறைவனின் கருணைப் பார்வை கிட்டியது எனலாம்!

கேள்வி:

அப்படியானால் - இறைவனை வணங்கினால் இறைக் கருணை கிட்டி விடுமா?

அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்:

(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள். (அத்தியாயம் 24 :56)

இறைவனின் அடியார் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் வரை அவர் மீது இறைவன் கருணையைப் பொழிந்து கொண்டிருக்கின்றான் என்றொரு நபிமொழி திர்மதி மற்றும் அஹ்மத் ஆகிய நபிமொழி நூல்களில் பதிவாகியிருக்கிறது!

அதாவது

இபாதத் இறைக் கருணைக்கு வழி வகுக்கிறது!

இறைக் கருணை - இறைவன் புறத்திலிருந்து

அறிவாற்றலைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது!

இபாதத் - ரஹ்மத் - இல்ம்

ஆகிய மூன்றையும்

ஒன்றோடு ஒன்று பிணைத்து வைத்துள்ளான் இறைவன்!

அடுத்து ஒன்றைப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!

**

அல்லாஹ்

நபி (ஸல்) அவர்களை

“ரஹ்மத்துல் லில் ஆலமீன்” என்று குறிப்பிடுகிறான் இறைவன்!

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை! (21:107)

அதே நேரத்தில்

நபியவர்களோ

தம்மை -

" நான் ஒரு ஆசிரியராக அனுப்பப் பட்டுள்ளேன் என்கிறார்கள்!

நபியவர்கள் விஷயத்திலும்

கருணை மற்றும் கல்வி ஆகிய இரண்டும்

இணைந்தே நிற்கிறது!

இறைவன் மிக அறிந்தவன்!

**

Comments