சேலத்தில் தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி பயிலரங்கம்!

கடந்த ஞாயிறு (26-11-17) அன்று சேலத்தில் தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி பயிலரங்கம் இறையருளால் இனிதே நடந்தேறியது. அதில் கலந்து கொண்ட சகோதர சகோதரிகள் சிலரின் கருத்துகள் இதோ:

"மிக நல்ல நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி.இன்னும் சாதாரண மக்கள் கேட்பதற்கு விளங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். சாதாரணமாக தொழு, தொழு என்று நூறு தடவை சொல்வதை விட இந்த நிகழ்ச்சியில் கூறும் எல்லா விஷயங்களையும் கூறி ஒரு முறை நிகழ்ச்சி நடத்தினால் இன்ஷா அல்லாஹ் பலர்
தொழுகையாளிகளாக மாறி விடுவார்கள். தொழுகையில் இவ்வளவு வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் உள்ளதா என்று தெரிந்து கொண்டேன்." 

"அல்ஹம்துலில்லாஹ்! இன் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தொழுகையை குறித்த குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் தெரிந்திருந்தாலும், அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும், எதோடு தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும் என்பதை மிக அழகான முறையில் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அதிகமான நற்கூலி வழங்குவானாக!" 

"தொழுகையை ஒரு வணக்கமாக மட்டுமல்லாமல், அதன் ஒவ்வொரு  நிலையையும் நம்முடைய வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி தொழ வேண்டும். தொழுகை வாழ்வில் ஏற்படுத்தும் வெற்றியை அறிந்ததால் பர்ள், சுன்னத், தொழுகைகள் அல்லாமல் நபிலான தொழுகையிலும் ஆர்வத்தை ஏற்படுத்தியது."


 “எனக்கு மதியம் 2 மணிக்கு மேல் ஒரு முக்கியமான வேலை இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதியம் போய் அந்த வேலையை செய்யலாம் என்று இருந்தேன்,. ஆனால் இங்கு  வந்ததும்  அந்த வேலையை ஒதுக்கி விட்டு நிகழ்ச்சி முடியும் வரை இருந்து பார்த்து விட்டு சென்றேன். மிக, மிக, மிக, பயனுள்ளதாக இருந்தது.”


"தாங்கள் நடத்திய முறை மற்றும் தெளிவு படுத்திய விதம் மிகவும் அருமையாக இருந்தது. பயன்படும் பல தகவல்களை கூறினீர்கள். நன்றி."


"அனைத்து இஸ்லாமியர்களும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புத புதையல்." 

"ஒவ்வொரு ஊரிலும் வீதி வீதியாக நடத்தப்பட வேண்டும்."

"அறிவுபூர்வமான நிகழ்ச்சி."

"மிகவும் விறுவிறுப்பாக நடந்த பயிலரங்கமானது முடிவு கேள்வி அருமையானது!"

"These workshops are one of the best ways to preach the true values of Islam. And this effort by the organizers is indeed a success; came to know about the multi dimensional impacts of the pillar of Islam."

Comments