தன்னம்பிக்கை!

ஒரு இறை நம்பிக்கையாளனைப் பொறுத்தவரை, "இறைவனின் உதவியோடு என்னால் இதனைச் செய்திட முடியும்" என்பதே அவரது தன்னம்பிக்கையாகும்.

தன்னம்பிக்கையை ஆங்கிலத்தில் Self confidence என்று சொல்வார்கள். தன்னால் ஒரு காரியத்தைத் திறம்படச் செய்திட முடியும் என்ற நம்பிக்கையே தன்னம்பிக்கையாகும். இதற்கு எதிர்ப்பதம் - Self doubt.

தன்னம்பிக்கையின் இன்னொரு முக்கிய அம்சம் - அது ஒரு குறிப்பிட்ட திறமை சார்ந்தது என்பதாகும். அதாவது Self confidence is Domain specific என்று சொல்வார்கள் உளவியலாளர்கள்.

சான்றாக - தேர்வு ஒன்றுக்கு மிக நன்றாக தயாரித்திருக்கிறான் ஒரு மாணவன். அவன் சொல்வதென்ன? இறைவனின் உதவியுடன் என்னால் இத்தேர்வில் மிகச் சிறப்பான மதிப்பெண் எடுத்துக் காட்ட முடியும் என்பது தான்! இங்கே ஆணவத்துக்கும் வேலை இல்லை. இறைவனைச் சார்ந்திருக்கும் தவக்குலுக்கும் குறைவில்லை! இதுவே இறை நம்பிக்கையாளனின் தன்னம்பிக்கை.

தேர்வுக்கு நன்றாக ஒருவன் தயாரிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இறை நம்பிக்கை உடையவனாக அவன் இருந்தாலும், அவனுக்கு வருவது - Self doubt!

நபி யூசுப் (அலை) அவர்களின் தன்னம்பிக்கை:

(யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.”(12:55)

மன்னர் துல்கர்னைன் அவர்களின் தன்னம்பிக்கை:

அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார். (18:95)

இறைவனே மிக அறிந்தவன்.

Comments