அநியாயம் செய்தால் நாம் இழப்பது என்னென்ன?



(இஸ்லாத்தில் சமூக நீதி குறித்த கட்டுரை – 1 - B )

எஸ் ஏ மன்சூர் அலி

நாம் பிறருக்கு அநியாயம் செய்பவராக விளங்கினால், நமக்கு ஏற்படும் இழப்புகள் என்னென்ன, அல்லது ஒருவரது அநியாயத்தின் விளைவுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
விளைவு 1:

நாம்  அநியாயம் செய்யத் தொடங்கி விடுவதன் மூலம், நம்மைப் படைத்த இறைவனின் அன்பையும் பாசத்தையும் நாம் இழந்து விடுகிறோம் என்பது தான், மிகவும் பாரதூரமான விளைவு ஆகும்!  You sacrifice the love of God by oppressing others!

அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.(3:57)

நன்றாக கவனியுங்கள்! அல்லாஹ்வுக்கு நீங்கள் எந்த ஒரு தீங்கையும் செய்து விட முடியாது. ஆனால் மற்றவர்களுக்குத் தான் நீங்கள் அநீதி ஒன்றை இழைத்து விடுகின்றீர்கள். ஆனால் நீங்கள் இழப்பதோ அல்லாஹ்வின் அன்பை! இது நம் உள்ளத்தைத் தைக்கவில்லையா?

விளைவு 2:

அடுத்து - ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகையிலும் நாம் என்ன கேட்கிறோம் இறைவனிடம்?

"உன்னையே வணங்குகிறோம்; உன்னிடத்திலேயே உதவி தேடுகிறோம்; எங்களுக்கு நேர்வழி காட்டுவாயாக!" என்று தானே கேட்கிறோம்?

நாம் பிறக்கு அநியாயம் செய்து கொண்டிருக்கும் நிலையில், நமக்கு நேர்வழி கிடைக்காது என்பது தான் அடுத்த அதிர்ச்சித் தகவல்!

 ان الله لایهدي القوم الظالمین –

நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்.(28:50)

 You sacrificed the guidance of Allah by oppressing others!

விளைவு 3:

அநீதி இழைப்பதும், பிறர் உரிமைகளைப் பறித்து விடுவதும், மனித உறவுகளை சீர்குலைத்து விடும்! இது குடும்பத்துக்குள்ளும், நம்மைச் சுற்றி வாழ்கின்ற இன்ன பிற மக்களுக்கிடையிலும், அன்பு, பாசம், சகோதரத்துவம் - எல்லாவற்றையும் சிதறடித்து விடும்! அவரவரும் தனித்தனித் தீவுகளாக வாழ்ந்திடும் அவல நிலையே மிச்சம்!

ஹதீஸின் கடைசிப் பகுதியை நினைவில் வையுங்கள்!

ஆகவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதீர்கள்."

Do not wrong one another!

விளைவு 4:

எவன் ஒருவன் அநியாயம் இழைக்கின்றானோ, அவன் தன் இதயத்தை இருள் சூழச் செய்து கொண்டு விடுகிறான். அவன் இதயம் தூய்மை பெறுவது என்பது சாத்தியமில்லாமல் போய் விடுகிறது.

When a person commits oppression, he darkens his heart.

ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்.(20:111)

....hopeless indeed will be the man that carries iniquity (on his back). (20:111)

விளைவு 5:

அநியாயம் செய்பவருக்கு மறுமையில் ஏற்படும் விளைவு:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்: "அநியாயம் செய்வதை அஞ்சிக் கொள்ளுங்கள்! ஏனெனில் - நாளை மறுமையில், அந்த அநியாயம் கடுமையான "இருள்களாக" மாற்றம் பெற்று காட்சி தரும்!"

اِتَّقُوا اَلظُّلْمَ, فَإِنَّ اَلظُّلْمَ ظُلُمَاتٌ یَوْمَ اَلْقِیَامَةِ

The Prophet (SAW) said, “Beware of oppression, for oppression will turn into excessive darknesses on the Day of Resurrection.”

மறுமை நாள் ஒரு அநியாயக்காரனுக்கு முன்னால் எப்படி காட்சியளிக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் அநியாயம் ஒன்றைச் செய்து விட்டு, இப்போது மறுமையில் இறைவனின் முன்னால்!

உங்கள் முன்னே, இரண்டு ஆடுகளுக்கு மத்தியில் இழைக்கப்பட்ட அநியாயம் ஒன்றுக்குக் கூட,   விசாரணை ஒன்று  நடைபெற்றுக் கொண்டிருக்கும். அந்த இடத்தில் உங்களை வைத்து உங்கள் மன நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்!

What will the day of Judgment look like for the oppressor?

The Messenger of Allah (SAW) said: “All scores will be settled on the Day of Resurrection; even the hornless sheep from the horned.” [Muslim]

You will see the disputes of the animals being resolved!

Imagine yourself on that Day!

Comments