முக நூல் பதிவுகள் - ஆகஸ்ட் - 2021


10 - 08 - 2021

Ethics without wisdom is no ethics!

@@@

10 - 08 - 2021

நேர்மையாக 

வாழ்வதற்கும்  கூட விழிப்புணர்வு அவசியம்!

***

16/08


நற்பண்புகளும் மனித வளங்களும்
-------------------------------------------
(Human resources for character development) 
***
1 மனிதத் தன்மை  - Human nature - Fitrat 

2 மனசாட்சி - இடித்துரைக்கும் ஆன்மா - Conscience

3 வெட்க உணர்ச்சி -  Modesty - Haya 

4 மன உறுதி / மனோ திடம் - Will Power / Power of choice  

5 அறிவாற்றல் - Human intellect - Aql

6 பரம்பரை குணம் - Family traits

7 உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் பொறுமை - Self regulation
இந்த ஏழும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை!
**
8 இறையச்சம் / இறை உணர்வு - Taqwa - 
 Reverential God consciousness

9 இறை வழிகாட்டுதல் - Revealed texts - Wahy 
இந்த இரண்டும் -கூடுதலாக  இறை நம்பிக்கையாளர்களுக்கு  உண்டு!

***

17/08

அல்லாஹ்வின் காலக் கணக்கீடு என்பது வேறு!

மனிதர்களின் காலக் கணக்கீடு என்பது வேறு!

நாம் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள்  என்பது 

இறைவனுக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே!

இறைவன் வகுத்து வைத்திருக்கும்

மாற்ற முடியாத இந்த விதியைப் 

புரிந்து கொள்ளவில்லையானால் - மிஞ்சுவது - 

மனக்கவலை! பதற்றம்! மனச்சோர்வு!

Sadness, anxiety and depression!

தனிப்பட்ட வாழ்விலும் சரி!

சமூக வாழ்விலும் சரி!

@@

17/08

உணர்ச்சிகள் படுத்தும் பாடு!
-------------------------------------
உணர்வுகளும் உணர்ச்சிகளும் மிக வலிமை வாய்ந்த "மனித வளங்கள்". 

தனி மனித வாழ்விலும், இல்லற வாழ்விலும், குழந்தை வளர்ப்பிலும், பணியிடங்களிலும்,  சமூக வாழ்விலும், பிற மக்களோடு கலந்து வாழ்வதிலும் மிகப்பெரிய தாக்கங்களை  ஏற்படுத்திடும் வலிமை உணர்ச்சிகளுக்கு உண்டு!

எனவே உணர்ச்சிகள் படுத்தும் பாடு குறித்து இன்றைய தலைமுறை தங்கள் கவனத்தைத் திருப்புதல் அவசியம்!

அத்துடன் - உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அறிவுரீதியாக செயல்படுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயம்!

***

கசப்பான ஒரே ஒரு சொல் 

கலந்துரையாடலுக்கு 

முற்றுப்புள்ளி வைத்து விடும்!

#உணர்ச்சிகள்

***

19/08

நமது புலன்களுக்குப் புலப்படாத

மறைவானவை (ghaib) பற்றிய 

இஸ்லாமிய நம்பிக்கைகள் அனைத்தும் - 

அறிவியலுக்கு முரணானது அன்று!

They are not "unscientific".

அவை அனைத்தும் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை!

They all belong to the realm of "supra-scientific".

அறிவியலின் பரப்பு என்பது 

ஐம்புலன்களுக்கு உட்பட்டவை மட்டுமே!

ஐம்புலன்களுக்கு உட்படாத பரப்பில் நிலவுகின்ற 

மறைவானவை (unseen) பற்றி 

கருத்து சொல்வதற்கு 

அறிவியலுக்கு எந்த "அறிவும்" கிடையாது!

Science definitely has "no knowledge" about the Unseen!

#back_to_the_basics

@@

20/08

இஸ்லாத்தில் சட்டவியலும் சமூகவியலும்
-----------------------------------------------
இஸ்லாத்தின் சட்டவியலுக்கு ( islamic law) நாம் கொடுத்து வருகின்ற முக்கியத்துவம் போல நாம் இஸ்லாத்தின் (islamic sociology) சமூகவியலுக்குக் கொடுப்பதில்லை என்பது வேதனையானதொரு விஷயம் ஆகும். 

இதனை இன்றைய பல இஸ்லாமிய அறிஞர்களே சுட்டிக்காட்டுகின்றனர். இவை இரண்டுமே, இஸ்லாம் எனும் நாணயத்தின் சரிசமமான இரண்டு பக்கங்கள்! 

ஆனால், துரதிருஷ்டவசமாக, இன்னும் நாம் இஸ்லாமிய சட்டவியலில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம், இஸ்லாத்தை "ஒரு தவறான வடிவில்" (a distorted picture) தான் சமர்ப்பித்துக்  கொண்டிருக்கின்றோம்! 

பொதுவாக, நம்மில் பலரும்  கூட, சட்டவியல் சிக்கலில் தான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றோம். 

இஸ்லாமிய சமூகவியலின் பக்கம் நாம் திரும்ப வேண்டும்; அது குறித்து கலந்துரையாடல்கள் நிகழ்த்தப்பட வேண்டும்; அதனை விவாதித்திட  வேண்டும்; அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் இன்றைய நிலை குறித்து உண்மையிலேயே கவலைப்படகூடிய மார்க்க அறிஞர்களின் பெரு விருப்பமாகும்!

#இஸ்லாஹ்

@@@

20/08
அஃக்லாக் 
----------------

அழுத்தமான

இஸ்லாமியப் பண்புகளைக் 

கொண்டே அல்லாமல் 

நிறுவன மயப் படுத்தப்பட்ட 

இஸ்லாமிய வெறுப்பை 

வென்றெடுக்க இயலாது!

Islamophobia Vs. Islamic ethics 

சூரத்துல் ஃபுர்கான் சிந்தனைகள்

@@@


23/08

நிலைமை எதுவாயினும் 
நம்பிக்கையாளர்கள்
ஒரு போதும் 
நம்பிக்கை இழக்க மாட்டார்கள்! 

Faith and Hope are tied together!

@@@

23/08

இனி -

வாய்ப்பே இல்லை என்று 

நாம் முடிவு கட்டி விடுகின்ற 

அந்தத் தருணத்தில் தான்... 

வாய்ப்புகளின் வாசல்களைத் 

திறந்து விடுவது 

வல்லோன் அல்லாஹ்வின் 

நியதியாகும்!

அது வரை.. 

அவன் நம்மிடம் 

எதிர்பார்ப்பதெல்லாம்

ஐந்து விஷயங்கள் :

1 சிந்தனை 
2 முயற்சி 
3 பொறுமை
4 நற்குணம்
5 துஆ 

ஆம்! 

இந்த ஐந்தில் 
எந்த ஒன்றில் நாம் 
குறை வைத்தாலும் 
"வாசல்" திறக்கவே திறக்காது!


@@

14/08

ஆசிரியருக்குத் தேவை 
அறிவும் கருணையும்!
***
மாணவருக்குத் தேவை
பணிவும் பொறுமையும்!!
***
#ஹிள்ர் (அலை)
#மூஸா (அலை)

**


01/09/ 2021

எந்த விஷயத்தில்

நமக்கு அறிவில்லையோ 

அது குறித்து 

எல்லாம் தெரிந்தது போல்

பேசத் துணிவது 

இஸ்லாமியப் பண்புக்கு

எதிரானது!

@@


Comments