திருமணத்துக்கு முன் - வழிகாட்டும் ஆலோசனை!

திருமணத்துக்கு முன் - வழிகாட்டும் ஆலோசனை!
(Premarital Counselling)

திருமணம் ஆகாத ஒரு இருபது மாணவிகளுக்கு திருமணத்துக்கு முன் - வழிகாட்டும் ஆலோசனை (Premarital Counselling) கடந்த 13 - 05 - 2012 அன்று வழங்கப்பட்டது.

அதில் கலந்து கொண்ட மாணவிகள், வழங்கப்பட்ட ஆலோசனைகள் பற்றி தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து தந்தார்கள். அவற்றில் சில் இதோ: 

நீங்கள் சொன்ன அனைத்து ஆலோசனைகளும் பயன் உள்ளதாக இருந்தன. எங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்தீர்கள். எங்கள் வாழ்க்கையில் எதையும் யோசித்து செயல் படுத்தும் முறையை நீங்கள் சொன்னீர்கள். இன்ஷா அல்லாஹ், நாங்கள் அவை அனைத்தையும் கடைபிடிப்போம். - ஒரு மாணவி  


இந்தப் பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் எல்லாரும் சொல்கிற மாதிரி தான் நீங்களும் சொல்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் புது மாதிரியாக இருந்தது உங்கள் ஆலோசனை.    - ஒரு மாணவி  

எனக்கு கல்யாணம் அப்படின்னா ரொம்ப பயமா இருந்தது. ஆனா இப்போ ஓரளவுக்கு அந்த பயம் போயிடுச்சு. - ஒரு மாணவி

இந்த தலைப்பை எப்படி இஸ்லாத்தோடு இணைத்து சொல்வீர்கள் (?) என்று நினைத்தேன். மாஷா அல்லாஹ்! நினைத்ததை விட அருமையாக வகுப்பு எடுத்தீர்கள். - ஒரு மாணவி

கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தணும் என்பதை அருமையாகச் சொன்னீர்கள். - ஒரு மாணவி

இந்த வயதில் எங்களுக்கு அவசியமான ஆலோசனைகளையும், காதல் (love) பற்றியும், இந்த வயசில் நாங்கள் தவறு செய்யாமல் இருக்க அதற்கு அல்லாஹ் கூறியுள்ள வழிகளையும் சரியான நேரத்தில் எங்களுக்கு தந்ததற்கு நன்றி. - ஒரு மாணவி

இந்த தலைப்பில் நீங்கள் வெளிப்படையாக பேசியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. - ஒரு மாணவி

இந்த வகுப்பில் நான் அதிகமான விஷயங்களை புரிந்து கொண்டேன். வாழ்க்கையின் முக்கியமான பகுதியை பற்றி தெரிந்து கொண்டேன். என்னுடைய குழப்பமான கேள்விக்கு தீர்வு கிடைத்தது. மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. யாரும் இதைப்பற்றி என்னிடம் சொன்னது இல்லை. முதன் முதலாக நீங்கள் நடத்தியது எனக்கு பயனாக இருந்தது. - ஒரு மாணவி

Comments