நலம் பயக்கும் கற்பிக்கும் முறைகள்! - ஆசிரியர் பயிற்சி பற்றிய கருத்துகள்

நலம் பயக்கும் கற்பிக்கும் முறைகள்!
(Effective Teaching Methodologies)

காரைக்கால் அன்னிஸா அகாடமி - பள்ளி நிர்வாகம் (School Management) குறித்த ஒரு வார கால பயிற்சி முகாம் ஒன்றுக்கு - கடந்த 11 - 03 - 2012 முதல் 18 - 03 - 2012 வரை - ஏற்பாடு செய்திருந்தது.


ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் அது. அதன் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக - "நலம் பயக்கும் கற்பிக்கும் முறைகள்" (Effective Teaching Methodologies) குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. அந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டோர் கருத்துக்கள்:

ஒரு நல்ல பள்ளிக்கூடம் அமைக்க, ஒரு நல்ல நிர்வாகம் ஒன்றை அமைத்திட, நான் ஒரு நல்ல ஆசிரியையாக விளங்கிட, நல்ல பெற்றோராக நான் இருக்க இப்பயிற்சி முகாம் எனக்கு உதவும். - ஒரு மாணவ ஆசிரியை.

அல்ஹம்துலில்லாஹ்!  மிகச் சிறப்பான வகுப்பு. இந்த வகுப்பில் ஒரு ஆசிரியை என்பதை விடுத்து தாய் என்ற முறையில் என்னை வெகுவாக திருத்திக் கொள்ள இந்த பயிற்சி வகுப்பு எனக்கு உதவியாக இருந்தது. இன்ஷா அல்லாஹ் நான் பள்ளிக்கூடம் ஆரம்பித்தால் அதற்கு இப்பயிற்சி வகுப்பு மிகச் சிறந்த வகையில் பயன்படும்.  - ஒரு சகோதரி

ஆசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சியாகவே எனக்கு அமைந்தது. அனுபவ ரீதியாக பல அனுபவங்கள் இருந்தாலும், தேடுதலுக்கான பல வாசல்களை இது திறந்து விட்டிருக்கிறது. நன்றிகள் பல. இரண்டு பள்ளிகள் ஆரம்பித்த நிலையில், மேம்பாட்டிற்கான பல அறிவை எனக்கு இங்கே கிடைத்தது. - ஒரு பள்ளி நிர்வாகி

நான் நாளை தொடங்கப் போகும் என் பள்ளியை சரியான முறையில் அமைத்திடவும், செயல் படவும் பயனுள்ள பல தரமான தகவல்களை அறிந்து கொண்டேன். குழந்தைகளை கையாளும் அணுகுமுறையை புதிதாக கண்டேன்.  - ஒரு சகோதரி  

It was a good experience in total. I believe it would transform a good teacher to a best teacher. I would recommend this type of session to all the teachers and in particular Muslim teachers. This session will surely inspire my teaching methodology in future. - A Teacher

இந்த வகுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஒவ்வொரு பெற்றோருக்கும் வேண்டிய மிக மிக அவசியமான வகுப்பு. இந்த வகுப்பு நான் என்னை புரிந்து கொள்ளும் வகையில் பயன்பட்டது. - ஒரு மாணவ ஆசிரியை

ஆசிரியர்கள் மாணவர்களை அழகாய் வடிக்கும் சிற்பி என அறிந்து கொண்டேன். அவர்களை நல்ல முறையில் உருவாக்குவது எப்படி என்பதை உணர்த்திய தங்களுக்கு அல்லாஹ் நன்மையை வழங்குவானாக. - ஒரு சகோதரி

நான் இதுவரை இந்த மாதிரியான பயிற்சி வகுப்பில் கலந்து கொன்டதில்லை. இது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. இந்த வகுப்பு குழந்தைகளின் இயல்பைப் பற்றி தெரிந்து கொள்ள உதவியது. - ஒரு மாணவி 

Comments