உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? – பயிற்சி பற்றிய கருத்துகள்

கடந்த 02-20-2013 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக்கல்லூரியில் - " உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?" – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:

உங்களுடைய வகுப்புகள் அனைத்தும் இயல்பாகவே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு நீங்கள் எடுத்த வகுப்பு தகுந்த சரியான நேரத்தில் எனக்கு உதவியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! - ஒரு மாணவி


அல்ஹம்துலில்லாஹ்! இந்த முறை அதிகமான விஷயங்களை உள்வாங்கியது போல் உணர்கிறேன். இந்த ஒரு நாள் முழுவதும் அதிகமாக தெரிந்து கொண்டேன். மனத்தூண்டல் (impulsiveness) குறித்து என்னை நானே பரிசோதனை செய்து கொண்டேன்.   - ஒரு மாணவி

உணர்ச்சிகள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். எந்த ஒரு விஷயத்திற்கும் Self Discipline அவசியம் என்பதைப் புரிந்து கொண்டேன். மற்றவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வேன். - ஒரு மாணவி

உணர்ச்சிகள் என்றால் என்ன? அவை எப்படி நமக்கு வருகின்றன? என்று இது வரைக்கும் நான் சிந்தித்ததில்லை. இந்த வகுப்பிற்குப் பிறகு தான் நான் சிந்தித்தேன். உணர்ச்சிகளை அறிவால் ஆள வேண்டும் என்பதை நான் அறிவுப்பூர்வமாக அறிந்தேன். உங்களுக்கு நன்றி! - ஒரு மாணவி

இந்த வகுப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த வகுப்பில் ஒவ்வொரு நிமிடமும் அடுத்து என்ன வரப்போகிறது என்று ஆர்வமாக இருந்தது. இந்த வகுப்பு வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் - இன்ஷா அல்லாஹ் - பயன்படக் கூடியதாக இருக்கும் என நம்புகிறேன். - ஒரு மாணவி

சுப்ஹானல்லாஹ்! ஒரு தனி மனிதர் தன்னைப்பற்றி மட்டுமல்ல, பிறரைப்பற்றியும் புரிந்து கொள்ள இது போன்ற வகுப்புகள் தேவை. அல்ஹம்துலில்லாஹ்! நான் பிறரை எந்த அளவிற்கு புரிந்து கொண்டு நடந்து கொள்கிறேன் என்று என்னைப்பற்றி புரிந்து கொண்டேன். அதே போல, மற்றவர்களும் ஒருவரது உணர்ச்சிகளை எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். - ஒரு மாணவி

இந்த பயிற்சி வகுப்பு நான் ஒரு செயலைச் செய்யும்போது உணர்ச்சிவசப்பட்டு செய்திடாமல், இனி சிந்தித்து செய்வேன். என் நிலைமையில் மட்டும் சிந்த்தித்து பார்க்காமல் அடுத்தவர்கள் இடத்தில் இருந்து சிந்தித்துப் பார்ப்பேன். - ஒரு மாணவி

இந்த வகுப்பில் Emotianal Intelligence - பற்றி இஸ்லாத்தோடு ஒப்பிட்டு நடத்தியது மிகவும் பயனுள்ள்தாக இருந்தது. இந்த வகுப்பு உளவியலை (psychology) குர்ஆன், ஹதீஸோடு ஒப்பிட்டுப் பார்க்க பயனுள்ளதாக இருக்கும். - ஒரு மாணவி

Comments