சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி? - பயிற்சி பற்றிய கருத்துகள்

கடந்த 13-12-2012 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக்கல்லூரி மாணவிகளுக்கான சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி? – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் (feedback) இதோ:


அறிவு, அறிவாற்றால், சிந்தனை, அறிவியல் - இவை எல்லாம் பற்றி தெளிவாய் தெரிந்து கொண்டேன். இவை பற்றி அல்லாஹ் தன்னுடைய திருமறையில் என்ன சொல்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டேன். இப்படிப்பட்ட விளக்கங்களைத் தான் நான் எதிர்பார்த்தேன். - ஒரு மாணவி
வகுப்பு மிகவும் அருமையாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்! Intellectual Development - என்றால்  என்ன, அதன் அவசியம் என்ன என்பதைக் கற்றுக்கொண்டோம். குர்ஆன், ஹதீஸை வைத்து எப்படி கருத்தோட்டங்களை (Theories) உருவாக்கலாம் என்பதைக் கூறினீர்கள். அதற்குண்டான பயிற்சிகளை அளித்தால் இன்னும் நன்றாக இருக்கும். இன்னும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. - ஒரு மாணவி

அறிவியல் எனக்கு மிகவும்  பிடிக்கும். அறிவியல் தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அறிவியல் என்பது உறுதியான அறிவு இல்லை; அது மனிதர்களால் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது என்பது தெளிவாகப் புரிந்தது. இஸ்லாமியக்கல்வி என்பது பிரச்னைகளைத் தீர்க்குமாறு அமைய வேண்டும்; புதிய கருத்தோட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொன்னீர்கள். MInd - என்பது இதயமும் மூளையும் தொடர்புடையது என்பது புது கருத்தாக இருந்தது. - ஒரு மாணவி

Comments