மன்னிக்கக் கற்றுக் கொள்வோம் - குழந்தைகளிடமிருந்து!!


என் தங்கை மகள். பெயர் அஸிமா! இரண்டரை வயது தான் ஆகிறது! தங்கை தன் மகளுடன் என் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.


நான் தொழுது விட்டு வீட்டுக்குத் திரும்பியதும் - அஸிமா என்னிடம் வந்து - "மாமா! அம்மா என்னை அடித்து விட்டார்கள்!" என்று தன் மழலைக் குரலில் அழுது கொண்டேசொன்னாள்.


ஏனம்மா குழந்தையைப் போய் அடித்தாய் என்று தங்கையிடம் கேட்டேன். தங்கை காரணம் சொன்னார்.

குழந்தையை சமாதானப் படுத்துவதற்காக - அஸிமாவிடம் - "உன்னை அடித்தார்கள் அல்லவா? அம்மாவைத் திருப்பி நாம் அடித்து விடவோமா என்று கேட்டேன்?"

அவள் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது:

"வேண்டாம் மாமா! அது தான் ஸாரி சொல்லிட்டாங்கல்ல?"

மன்னிக்கக் கற்றுக் கொள்வோம் - குழந்தைகளிடமிருந்து!!

"(அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் விட்டு விடவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். (24:22)

Comments