உங்களுக்கு எதிலெல்லாம் ஆர்வம்?

உங்களின் ஆர்வங்களைப் பட்டியலிடுங்கள்!

சரி, இப்போது உங்கள் டைரியை எடுத்துக் கொள்ளுங்கள். சாகவாசமாக (relaxed) அமர்ந்து கொள்ளுங்கள்.


நீங்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்ற காரியங்கள் அனைத்தையும் பட்டியலிடுங்கள். உங்களை ஆர்வப்படுத்துகின்ற அனைத்தையும் – அது பத்து அல்லது பதினைந்து அல்லது இருபது என்று இருந்தாலும் தவறில்லை – பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.



ஒருவருக்கு ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்கின்றது என்பதற்கு என்ன அளவுகோல்? அவர் அந்த ஒன்றில் எவ்வளவு நேரம் செலவிட்டாலும் அது அவருக்கு அலுத்துப் போகாது! வாயவ றடைட ழெவ டிந டிழசiபெ! அது அவரது சிந்தனையையும் செயல்பாட்டையும் ஆக்கிரமித்திருக்கும். அது தான் அளவுகோல்.

சரி, அனைத்தையும் பட்டியலிட்டு விட்டீர்களா?

அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது:

உங்கள் பட்டியலில் – இறைவன் தடை செய்துள்ள ஏதாவது இடம் பெற்றுள்ளதா என்று பாருங்கள். உதாரணமாக – ஒருவர் எனக்கு னசரஅள வாசிக்கப்பிடிக்கும், பரவையச வாசிக்கப்பிடிக்கும் என்று அதனைப் பட்டியலில் சேர்த்திருந்தார் எனில் அதனை அவர் நீக்கி விடட்டும். இவ்வாறு மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் நீக்கி விட்டு – இரண்டாவது பட்டியல் ஒன்றை அதற்குக் கீழே தயாரித்துக் கொள்ளுங்கள்.

அடுத்தது -

உங்கள் பட்டியலில் – நீங்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்ற ஏதாவது விஷயம் ஒன்றில் உங்களுக்கு எந்த ஒரு பயனும் அளிக்காத காரியம் ஏதாவது இருந்தால் அதனையும் நீக்கி விடவும். சான்றாக எனக்கு தொலைக்காட்சியில் கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்கும்; நெடுந்தொடர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் பிடிக்கும் என்று எழுதியிருந்தால் இவைகளையும் பட்டியலிலிருந்து நீக்கி விடுங்கள்.

உங்களுக்கு எது பயன் அளிக்குமோ, அதில் நீங்கள் ஆர்வம் காட்டுங்கள்! - என்பது நபிமொழி (Ihris maa yanfa'uka).


அடுத்து - மூன்றாவது பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள். இப்பட்டியலில் உங்களை ஆர்வப்படுத்தும் விஷயங்களின் எண்ணிக்கை இப்போது மிகவும் குறைந்திருக்கும். பரவாயில்லை!

அடுத்தது -

இந்த மூன்றாவது பட்டியலில் நீங்கள் எழுதியிருப்பவற்றுள் – உங்களுக்கு எது மிக மிக அதிகமான விருப்பமாக இருக்குமோ அவைகளுக்கு முன்னுரிமை தந்து அதன் அடிப்படையில் அவைகளை வரிசைப்படுத்தும் நான்காவது பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள். இது தான் உங்களுடைய இப்போதைய ஆர்வப் பட்டியல்!

அடுத்தது -

ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கழித்து மீண்டும் உங்கள் டைரியைப் புரட்டுங்கள். உங்களின் ஆர்வப்பட்டியலைப் பார்வையிடுங்கள். இப்போது அப்பட்டியலில் ஏதாவது புதிதாக சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களர் சேருங்கள். அதிலிருந்து ஏதாவது ஒன்றை நீக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, நீக்கி விடுங்கள். புதிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு ஒரு வருடம் கழித்தும் புதிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து – நீங்கள் பட்டியலிட்ட விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து நேரம் செலவழித்து உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் களம் ஒன்றைப் பற்றி சிந்தியுங்கள். சிந்தித்துக் கொண்டே இருங்கள்.

இறைவன் உங்களுக்கு மகத்தான வாய்ப்புகளைத் திறந்து விடுவான் – இன்ஷா அல்லாஹ்!

Comments