சூரா அல் மாயிதா - ஒரு ஆய்வு

1. திருமறை அல் குர்ஆனுக்கு விரிவுரை எழுதுகின்ற விரிவுரையாளர்களில் சிலர், திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு மையக் கருத்து (Central Theme) இருப்பதாகவும், அந்த மையக் கருத்தின் அடிப்படையிலேயே அத்தியாயத்தின் அனைத்து இறை வசனங்களும் சுற்றிச் சுழலும் என்றும் கூறுகின்றனர்.

இந்தக் கருத்தினை மனதில் கொண்டு சூரா அல் மாயிதாவை நாம் சிந்தித்துப் பார்த்த போது எமக்குள் உதித்த கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அறிஞர் பெருமக்கள் இதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

2. இறங்கிய சூழல்: இந்த அத்தியாயம் ஹிஜ்ரி 6 அல்லது 7-ம் ஆண்டு இறக்கியருளப் பட்டது. குறிப்பாக ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கலாம் என்கின்றனர் விரிவுரையாளர்கள்.

3. சூரா அல் மாயிதா அத்தியாயத்தின் மையக் கருத்து: 'மனிதர்களின் உள்ளம் - உள்ளத்தைத் தூய்மைப் படுத்திடுவதில் தனிமனிதப் பொறுப்பு - Individual Responsibility - அதனைத் தூய்மைப் படுத்துவதின் (Tazkiya) வழிமுறைகள்' - இவைகளே இவ்வத்தியாயத்தில் மையக் கருத்துக்களாகும்.

4. 'முஃமின்களே! உங்கள் கடமைகளை (obligations) முழுமையாக நிறைவேற்றுங்கள்' (5: 1) என்று இவ்வத்தியாயம் துவங்குகிறது. ' 'முஃமின்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப் படுங்கள்!' (5: 105) என்ற வசனமும் இந்த சூராவில் வருகிறது.

அதாவது மற்றவர்களின் குறைகளைத் துருவித் துருவிப் பார்த்துக் கொண்டிருக்காமல் - தமது உள்ளத்தின் நிலை குறித்தே ஒருவர் கவலை கொள்ள வேண்டும் - இதுவே சுய பரிசோதனை!

ஆனால் இது சுய நலமாக ஆகி விடக் கூடாது! பிறரைச் சீர்திருத்துவதும் நமது கடமையே. இவ்வசனத்துக்கு ஹள்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் தந்த விளக்கம் இதுவே:

5. நமது உள்ளங்களைத் தூய்மைப் படுத்திடவே விரும்புகின்றான் இறைவன். எனவே அதற்கான வழி வகைகளையும் இந்த சூராவில் சொல்லித் தருகின்றான்.

உள்ளத் தூய்மைக்கு முதல் படியே உடல் தூய்மை தான். எனவே இறைவன் நாம் உண்ணும் உணவு தூய்மையாக இருந்திடல் வேண்டும் என்று விரும்புகிறான். உணவின் தூய்மை குறித்து ஹலாலன் தய்யிபா' என்று குறிப்பிடுகிறான். ஹராமான உணவு வகைகளைப் பட்டியலிட்டுத் தவிர்க்கச் சொல்கிறான் அல்லாஹ்.

பார்க்க வசனங்கள் 1- 4.

ஹராமாக்கப் பட்ட உணவுகள் நமது உடலை மட்டும் கெடுப்பதில்லை. நமது உடலோடு சம்பந்தப்பட்ட உள்ளமும் இதனால் கெடுகின்றது. 93 - ம் வசனமும் பார்க்க.

கெட்டுப் போன உள்ளத்தை வைத்துக் கொண்டு துஆ கேட்டால் எப்படி அது ஏற்கப் படும்? ஹதீஸ் நினைவுக்கு வருகிறதா?

6. திருமணம் நமது நஃப்ஸைப் பாதுகாக்கிறது. (ஹதீஸ் - திருமணம் கண் பார்வையைத் தாழ்த்துகிறது).

விபச்சாரியாகவோ, வைப்பாட்டியாகவோ வைத்துக் கொள்பவனை - நஷ்டமடைந்தவன் - அதாவது - மினல் முஹாஷிரீன் - என்று குறிப்பிடுகிறான் இறைவன் - வசனம் 5.

கற்புடைய பெண் என்று கற்புக்கு இங்கே அழுத்தம் தரப் படுகின்றது. அதாவது கற்புடையவளை மனைவியாகப் பெறுதல் நமது மனத்தூய்மைக்கு வழி வகுக்கும். ஆனால் நிபந்தனை - மஹர் கொடுத்து விட வேண்டும். (வரதட்சணை வாங்குவபவர்களின் நிலை என்ன?)

6. உடல் தூய்மை: உளூ, குளிப்பு, தயம்மும் - இவை குறித்த வசனங்கள் ஏன் அல்மாயிதா சூராவில் இறாக்கப் பட்டுள்ளது என்பது புரிகின்றதா? பார்க்க வசனம் - 6.

முன்பு குறிப்பிட்டதைப் போல உடல் தூய்மை உள்ளத்தூய்மைக்கு வழி வகுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மது முற்றிலும் தடை செய்யப்பட்டது இந்த அத்தியாயத்தில் தான்! பார்க்க வசங்கள் 90-91.

7. நீதி செலுத்துதல்: நீதி செலுத்துதலும் பரிசுத்தத் தன்மையும் இணைக்கப் பட்டுள்ளதை கவனியுங்கள் வசனம் 1 மற்றும் 8.

'வலா தஜ்ரிமன்ன' என்பது இரண்டு வசனங்களிலும் வருவதைக் கவனிக்க.

நீதி செலுத்துவது - 'அக்ரபு லித்தக்வா'. இங்கே தக்வாவுக்கு 'பரிசுத்தத் தன்மை' என்ற பொருளும் உண்டு!

8. அல்லாஹ்விடம் செய்து கொண்ட உறுதி மொழியை நாம் நிறைவேற்றிடல் மிக அவசியம். உறுதி மொழிக்கு மாறு செய்தால் - இதயங்கள் இறுகி விடும்! (வசனம் 13).

மாறு செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை பனீ இஸ்ராயீல் வரலாற்றிலிருந்து (பார்க்க வசனம் - 60) எச்சரிக்கின்றான். பனீ இஸ்ராயீல்களின் உறுதிமொழி, அவர்கள் அதற்கு மாறு செய்தது பற்றி பார்க்க வசனங்கள் 12, 13.

அல்லாஹ். அவர்களை பன்றிகளாகவும், குரங்குகளாகவும் ஆக்கியது - அவர்களின் இதயங்கள் இறுகி விட்டதாலா?

9. பனீ இஸ்ராயீல்களிடம் அல்லாஹு தஆலா வாங்கிய உறுதிமொழிகளுள் ஒன்று - 'என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து' - என்பதும் ஒரு பகுதி. எனவே பனீ இஸ்ராயீல் மக்கள் நபி (ஸல்) அவர்களை விசுவாசித்து உதவியும் செய்திருக்க வேண்டும். பார்க்க வசனங்கள் 15, 19.

அல்லாஹ்வுடன் செய்த உறுதி மொழிக்கு மாறு செய்தால் விரோதமும் குரோதமும் சமூகத்தில்! மறுமை வரை! பார்க்க வசனம் 14.

10. தூதருக்கு உதவி செய்திட வேண்டியது உறுதி மொழி. ஆனால் ஹள்ரத் மூஸா (அலை) அவர்கள் எதிரிகளுடன் யுத்தம் புரிந்திட தனது சமூகத்தை அழைக்கிறார்கள் (வசனம் 21).

புற முதுகு காட்டிட வேண்டாம்! ஆனால் அவர்கள் 'நீரும் உம்முடைய இறைவனும் சென்று யுத்தம் புரியுங்கள்' என்று மறுத்து விடுகின்றார்கள். அந்த மக்களிடமிருந்து தங்களைப் பிரித்து விடக் கோருகின்றார்கள் மூஸா (அலை) அவர்கள். ஏன் பிரித்து விட வேண்டும்? சிந்தியுங்கள்!

11. ஆபில் - காபில் சம்பவம் ஏன் இந்த அத்தியாயத்தில்?

இறையச்சம் உடையவர்களின் குர்பானி மட்டுமே ஏற்கப்படும். தூய்மையற்றவர்களின் குர்பானிகளை இறைவன் ஏற்பதில்லை என்பதை உணர்த்திடத்தான்! வசனம் 27. அதாவது - இதயத்தூமையுடன் செய்யப் படும் குர்பானியே குர்பானி!

12. உயிர் மற்றும் உடமைகள் - ஒரு நஃப்ஸின் உரிமைகள். எனவே கொலை செய்வதோ, திருடுவதோ - ஒருவருக்கு செய்யப் படும் அநீதி. ஒரு நஃப்ஸைக் கொலை செய்தவன் (வசனத்தில் நஃப்ஸ் என்றே வருகிறது) மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போல் ஆவான். எனவே கடுமையான தண்டனை. வசனம் 33.

திருட்டுக்கும் அப்படியே வசனம் 38.

13. ஈமான் கொள்ளும்போது அல்லாஹ் நமது மனதைத் தூய்மைப் படுத்துகிறான். ஆனால் இறை நிராகரிப்பில் வீழ்பவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மைப் படுத்திட விரும்புவதில்லை - அன்-யுதஹ்ஹிர-குலூபஹும் - வசனம் 41.

14. பொய்யையே கேட்கிறார்கள், தடுக்கப் பட்டவைகளையே உண்ணுகிறார்கள். இவை இரண்டும் இறை நிராகரிப்பின் தன்மைகள். தடுக்கப் பட்டவைகளை - ஹராமை - உண்பதால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்க்க! வசனம் 42.

15. குற்றம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை அளிப்பது, பாதிக்கப் பட்டவர்களின் மனத்தில் அமைதியை ஏற்படுத்தி விடும். குற்றவாளியை மன்னித்தல் என்பது பாதிக்கப் பட்டவர்கள் புறத்திலிருந்து வந்திட வேண்டும். எனவே, சமூகத்தில் மனித மனங்களில் அமைதியை ஏற்படுத்துவன இஸ்லாமியச் சட்டங்களே! அவைகளைக் கொண்டே தீர்ப்பளித்திடல் வேண்டும். பார்க்க வசனங்கள் 43- 50.

16. மனித உறவுகள் நமது உள்ளத்தோடு சம்பந்தப் பட்டது. எனவே - நாம் யாருடன் நல்லுறவு வைத்துக் கொள்ள வேண்டும், யார் யாருடன் நாம் சேர்ந்திடக் கூடாது? யார் நமக்குப் பாதுகாவலர்கள், யாரை நாம் பாதுகாவலர்களாக ஏற்றிடக் கூடாது?

வழிகாட்டுதலுக்கு பார்க்க வசனங்கள் 51-58.

அல்லாஹ், அவனது தூதர், தொழுது ஜகாத் கொடுக்கும் இறை நம்பிக்கையாளர்கள் இவர்களே நமது பாதுகாவலர்கள்.

யூதர்கள், கிருத்துவர்கள், நயவஞ்சக முஸ்லிம் பெயர்தாங்கிகள், இறை நிராகரிப்பாளர்கள் - இவர்கள் நமக்குப் பாதுகாவலர்களாக் ஒரு போதும் விளங்கிட முடியாது. இத்தகையவர்களுடன் அவ்வாறு உறவு வைத்துக் கொண்டால் என்ன ஆகி விடும்?

நாமும் அவர்களைப் போல் ஆகி விடுவோம்! வமன்-யவல்லஹும் மின்கும் ஃப இன்னஹூ மின்ஹும் - வசனம் 51. அப்புறம் நமக்கேது நேர்வழியெனும் ஹிதாயத்? வசனம் 52.

இதயங்களில் நோய் இருந்தால் தான் அவர்களிடம் விரைந்து செல்வார்களாம். வசனம் 52.

அவர்களிடம் உறவாடினால் பாவமான காரியங்களைத் தடுக்கும் ஆற்றலை நாம் இழந்து விடுவோம். வசனம் 79.

அதே நேரத்தில் எல்லா கிருத்தவர்களும் ஒரே மாதிரியானவர்களா? இல்லை! மனத்தில் அகந்தை இல்லாத கிருத்துவர்கள் உண்மையை உணர்கிறார்கள். வசனம் 82.

18. இதயங்களில் உள்ளதை அல்லாஹ் நன்கறிகின்றான். வசனம் 7.

அல்லாஹு த ஆலா சில விஷயங்களை மறைத்து விடுவதில் நன்மை உண்டு. அல்லாஹ் மறைத்து வைத்திருக்கும் ஒரு விஷயத்தைக் குறித்து துருவித் துருவிக் கேட்டல் மிகவும் தவறு. ஏன்? பார்க்க வசன்ங்கள் 101-102.

19 அது போலவே நமது உள்ளத்தின் தன்மை எப்படிப்பட்டது என்றால் - ஒருவர் உள்ளத்தில் இருப்பதை வேறு எவரும் அறிந்திட முடியாது! இந்த நிலையில் நமது உலக காரியங்களை ஒழுங்கு படுத்திக் கொள்வது அப்படி? பார்க்க வசனங்கள் 106-107.

உள்ளதை உள்ளவாறு அவர்கள் சாட்சியம் கூறும்படி செய்வதற்கு, இது மிக்க சுலபமான வழி - வசனம் 108 - என்பதை ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது.

20. ஒரு இறைத்தூதர் கூட - மற்றவர்கள் உள்ளத்தில் உள்ளதை அறிந்து கொண்டு விட முடியாது - அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தாலே தவிர! ஈசா நபி (அலை) அவர்களை அல்லாஹ் மறுமையில் கேட்பது எப்படி இருக்கிறது பாருங்கள்? வசனங்கள் 116, 117.

21. தவ்பா - ஒரு மனிதனை தூய்மையாக்கி விடும். வசனம் 73.

22. இஸ்லாத்தை ஏற்றல் ஒரு மனிதனை தூய்மையாக்கி விடும். வசனம் 73-74.

23. ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர்கள் அன்று பிறந்த பாலகர்களாக திரும்புகிறார்கள் என்பதை நினைவு கூர்க!

24. நஃபகா - கர்ளன் ஹசனா

25. மனோ இச்சை - பார்க்க வசனம் 70.

இறைத்தூதர் ஒன்றை சொல்கிறார். நம்து மனம் இன்னொன்றைச் சொல்கிறது. நாம் இறைத்தூதர் சொன்னதை ஏற்கத் தயங்குகிறோம் எனில் நமது நிலை என்ன? சான்றாக வரதட்சணை விஷயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்??

Comments