இஸ்லாமிய கடைகளில்தான் பொருட்களை வாங்குகிறேன்!

'நான் ஒரு முறை ஓர் இஸ்லாமிய மருந்து கடையில் சில பொருட்கள் வாங்கினேன். வாங்கி விட்டு, வீட்டுக்கு போய் விட்டேன். இதில் முக்கியத்துவம் ஏதும் இல்லை. அந்த கடை எனக்கு தெரிந்த கடை அன்று. தற்செயலாக என் கண்ணில் பட்டதால், அந்த கடையில் நுழைந்தேன் .
அவ்வளவுதான். அந்த கடை பெயரைக்கூட நினைவில் கொள்ளவில்லை.


சில நாட்கள் கழித்து அதே மருந்து தேவைப்பட்டது. வேறு கடைகளில் கிடைக்காததால் , அதே இஸ்லாமிய கடைக்கு சென்றேன். அந்த கடையின் லொக்கேஷன் மறந்து விட்டது. கொஞ்சம் கஷ்டப்பட்டு தேடித்தான் அந்த கடைக்கு சென்றேன். தேவையானதை வாங்கி விட்டு, காசை நீட்டினேன். 

கவுண்டரில் இருந்தவர் என்னை சில உற்று பார்த்து விட்டு, 'போன வாரம் இதே மருந்தை எங்களிடம் வாங்கினீர்கள் அல்லவா' என்று கேட்டார்.
எனக்கு ஆச்சர்யம் .. எனக்கு அவர் முகம் நினைவு இல்லை. ஆனால் அவர் என்னை நினைவு வைத்து இருக்கிறாரே.. சரி, நான் யாராக இருந்தால் என்ன ,,ஏன் என்னை விசாரிக்கிறார். அந்த மருந்துடன் சேர்த்து , இன்னொரு பொருளை கேட்டீர்கள். நான் அது வருவது இல்லை என சொன்னேன்.. நினைவு வருகிறதா?' என்றார்.

'ஆமா சார்,, நான் தான் அது ..ஏன் கேட்கிறீர்கள்?' என்றேன்.

'போன முறை ஐனூறு ரூபாய் கொடுத்து விட்டு, மீதியை வாங்காமல் சென்று விட்டீர்கள்... அந்த மீதி காசை தனியாக எடுத்து வைத்து உங்களுக்காக காத்து இருக்கிறேன். இன்றும் நீங்கள் வரவில்லை என்றால் , அந்த காசை தானம் செய்து விடலாம் என இருந்தேன். நல்ல வேளை வந்து விட்டீர்கள் - என சொல்லியபடி, தனியாக எடுத்து வைத்து இருந்த மீதி காசை , பத்து பைசா கூட குறையில்லாமல் கொடுத்தார்.

எனக்கே அப்போதுதான் நினைவு வந்தது. காசு எப்படி குறைகிறது என குழம்பி, பிறகு கை விட்டு விட்டேன். இவர் நினைவு வைத்து கொடுக்கிறாரே.

'எங்கள் மார்க்கம் மற்றவர்கள் காசுக்கு ஆசைப்படக்கூடாது என சொல்லித்தந்து இருக்கிறது. எனவேதான் இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறேன்' என்றார்.

எனக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது.

அன்றில் இருந்து நான் பெரும்பாலும் இஸ்லாமிய கடைகளையே pசநகநச செய்கிறேன். ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கு தேவையான பொருட்களை இஸ்லாமிய கடைகளில்தான் பெரும்பாலும் வாங்குகிறேன்.'

Source: http://www.pichaikaaran.com

Comments