ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் இப்படிப்பட்டவர்களாக இருந்தால்...?

இதோ ஒரு பழைய செய்தி!

ஐதராபாத், 1998, அக்டோபர் 16

பல இலட்சம் மதிப்புள்ள நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையான செயல் அண்மையில் ஐதராபாத்தில் நடந்துள்ளது.


ஆட்டோ ஓட்டும் தொழில் செய்பவர் ஷேக் மஹபூப் அலி. பயணி ஒருவர் தம்முடைய ஆட்டோவில் தவறுதலாக விட்டுச் சென்ற பையைத் திறந்து பார்த்தார். அதில் பல இலட்சம் மதிப்புள்ள வைர, தங்க நகைகள் இருந்தன.

மஹபூப் அலி அதைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பைக்கு உரியவர் முன்பே காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

எனவே, நகைப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நகைக்கு உரியவர் மனம் நெகிழ்ந்து அதே இடத்தில் ரூபாய் பத்தாயிரத்தை அலிக்குப் பரிசாக அளித்தார்.

இச்செய்தி அறிந்த நகரச் சுழல் சங்கம் ஏழையான மஹபூப் அலிக்கு ஒரு ஆட்டோவை வாங்கிப் பரிசாக அளித்தது. அலியின் நேர்மையைப் பண்பை நாமும் பாராட்டலாமே!

நன்றி: தமிழ்ப்பாட நூல்; ஐந்தாம் வகுப்பு; பாடம் 12; செய்திக்கோவை; பக்கம் 73; பாடம்: நேர்மை    

Comments