மாணவிகளை செல்போனில் படம் பிடித்த மாணவர்கள்


செய்தியும் படிப்பினையும்!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வரும் 3 மாணவிகள் தங்களது வகுப்பறையை பெருக்கியபோது அதை செல்போனில் படம் பிடித்து வக்கிரமாக கமெண்ட் அடித்ததோடு அவர்களை மிரட்டவும் செய்த மாணவர்கள் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.



அதில் 2 மாணவர்களைப் போலீஸார் கைது செய்தனர். ஒருவரைத் தேடி வருகின்றனர்.

இப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வரும் மாணவிகள் மூன்று பேர் சேர்ந்து தங்களது வகுப்பறையை பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பிளஸ்டூ படிக்கும் மூன்று மாணவர்கள் மாணவிகளை செல்போனில் படம் பிடித்துள்ளனர். மேலும் வக்கிரமாக பேசியும் உள்ளனர்.

இதைப் பார்த்த ஒரு மாணவி, மாணவர்களிடம் இந்த செயலைத் தட்டிக் கேட்டார். அதற்கு அவர்கள் இதை வெளியில் சொன்னால் அவ்ளவுதான் என்று கூறி மிரட்டியுள்ளனர்.

மாணவர்களின் இந்த இழி செயல் குறித்து தலைமை ஆசிரியையிடம் மாணவிகள் புகார் கூறியுள்ளனர். அவரோ மாணவர்களைக் கூப்பிட்டுக் கண்டிப்பதற்குப் பதில் சம்பந்தப்பட்ட மாணவிகளிடமே, நீங்க ஒழுங்கா இருந்தா அவங்க ஏன் படம் பிடிக்கப் போறாங்க என்று கூறி மாணவிகளை அதிர வைத்துள்ளார்.

இதையடுத்து தங்களது பெற்றோரிடம் மாணவிகள் நடந்ததைக் கூறவே அவர்கள் கொந்தளித்துள்ளனர்.

***

இப்படிப்பட்ட செய்திகளை மற்ற செய்திகளோடு படித்து விட்டு அடுத்த வேலை என்னவென்று பார்ப்போம் என்று அலட்சியப் படுத்தாமல் - ஒரு சில படிப்பினைகளையாவது படித்துக் கொள்வோமா?

படிப்பினைகள் மூன்று:

1. பெண்களுக்கு - மாணவியர் பருவத்திலேயே தம் உடல் அழகை மறைத்துக் கொள்கின்ற ஆடை அணிதல் மிகவும் பாதுகாப்பானது.

2. Co-education - அதாவது மாணவரும் மாணவியரும் சேர்ந்து படிக்கும் கல்வி முறைக்கு முழுக்குப் போட்டு விட்டு, மாணவர்களும், மாணவிகளும் தனித்தனியே கல்வி பயிலும் நிலைக்கு நாம் திரும்ப வேண்டும் என்பதை நாட்டு மக்கள் உணரட்டும்.

Comments