குழந்தை வளர்ப்பு ஒரு கலை!

நல்ல துணி வகைகளை எடுத்து நன்றாக தைக்கத் தெரியாத டெய்லர் ஒருவரிடம் கொடுத்தால் நமது உடைகளின் நிலை என்னவாகும்?

தேவையான அனைத்து சமையல் பொருட்களையும் தேர்வு செய்து சமைக்கத் தெரியாத சமையல்காரரிடம் கொடுத்தால் அந்த உணவின் சுவை எப்படி இருக்கும்?





நல்ல செங்கற்கள், நல்ல சிமெண்ட், நல்ல இரும்புக் கம்பிகள் என்று பார்த்து பார்த்து வாங்கி அரைகுறைப் பொறியாளர் ஒருவரிடம் ஒப்படைத்தால் நமது வீட்டின் அழகு எப்படி காட்சியளிக்கும்?

தோட்டக்கலை தெரியாத ஒருவரிடம் இளம் பூச்செடிகளை ஒப்படைத்தால் அவைகளின் கதி என்னவாகும்?


ஆடு,மாடு,கோழிகளை பண்ணை வைத்து வளர்ப்பவர்கள் அது குறித்த அறிவை சிறிதும் பெறாமல் போய் விட்டால் அந்த உயிரினங்கள் என்ன பாடு படும்?

அறை குறை மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டால் நோயாளி என்ன ஆவார்?

பெற்றோர்களே!

தையல் ஒரு கலை(யுசவ)! அது ஒரு திறமை(ளுமடைட)! சமையல் ஒரு கலை! அது ஒரு திறமை! வீடு கட்டுதல் ஒரு கலை! அது ஒரு திறமை!

அது போலவே தோட்டப் பராமரிப்பும், ஆடு மாடு வளர்த்தலும், அறுவை சிகிச்சையும் வௌ;வேறு கலைகளே! திறமைகளே!

அப்படியானால் குழந்தை வளர்ப்பு? அது ஒரு கலை அல்லவா? அது ஒரு திறமையல்லவா?

திருமணமான எத்தனையோ தம்பதிகள் குழந்தைப் பேற்றிற்காக ஏங்கித் தவிப்பதைக் கண்டிருப்பீhகள்! குழந்தைப் பேற்றினை அதுவரை அடையாத ஒரு மனைவியின் ஏக்கத்தை இவ்வாறு வர்ணிக்கிறார் ஒரு கவிஞர்:

அடுக்கி வைக்கவா?
கலைத்துப் போடவா?
அடுக்கி வைத்து என்ன பயன்?
கலைத்துப் போட
ஒரு குழந்தை இல்லையே?
(நன்றி:தினகரன் வார மலர்)

அல்லாஹுதஆலா உங்களுக்கு அழகான குழந்தையை ஃ குழந்தைகளை அருட்கொடையாக வழங்கியிருக்கிறான். ஆனால் நமது குழந்தைகளை எப்படி வளர்த்திட வேண்டும் என்பது குறித்து நமக்கு ஆனா ஆவன்னா கூடத் தெரியாது! இது வேதனை அல்லவா?

நன்றாக உடுத்திக் கொள்ள நல்ல டெய்லரைத் தேடிப் போகிறோம். நாம் பெறுகின்ற குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்களாக நாம் விளங்கிட வேண்டாமா? சிந்தியுங்கள் சிறிது நேரம்! இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு குறித்து…

Comments