திட்டமிட்டுச் செயலாற்ற பயிற்சி கொடுங்கள்!


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்: “உங்களில் மிகச் சிறந்தவர் எவர் எனில் – யார் ஒருவர் எந்த ஒரு செயலையும் மிகச் சிறந்த முறையில் (with perfection) செய்து முடிக்கின்றாரோ அவரே!” (அல் -பைஹகி – ஷுஅபுல் ஈமான்)



நம்மில் பெரும்பாலான பெற்றோர்கள் – திட்டமிட்டு செயல் படுவதில்லை. எல்லாமே அரைகுறை வேலைகள் தான். எந்த ஒரு மிகச் சிறிய ஒரு செயலாக இருந்தாலும் சரி, அல்லது பெரிய காரியமாக இருந்தாலும் சரி – ஒன்றை எப்படி துவங்குவது, எப்படி தொடர்வது, எப்படி அழகாக முடிப்பது – என்று நாம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லையோ என்றே தோன்றுகிறது.


வீட்டில் – அது சமையலாக இருக்கட்டும், துணி துவைப்பதாக இருக்கட்டும், வீட்டைத் தூய்மைப் படுத்துவதாக இருக்கட்டும் – எல்லாமே அரைகுறை வேலைகள் தான். இங்கே நாம் சொல்ல வருவது நமது குழந்தைகளுக்கு திட்டமிட்டு செயலாற்ற எப்படி பயிற்சி அளிப்பது பற்றித்தான்.

இதனை ஆங்கிலத்தில் Good Work Habit என்கிறார்கள். அதாவது எந்த ஒன்றையும் சிறப்பாகச் செய்திடும் பழக்கம் என்று இதனைச் சொல்லலாம். இதனைக் கற்றுத் தருவதில் பெற்றோருக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது.

அது என்ன? எப்படி?

Good work habit என்பது பின் வரும் 5 அம்சங்களையும் கொண்டது:

1. எந்த ஒரு காரியத்திலும் இறங்குவதற்கு முன்பு – அதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் சேகரித்து நம் முன் வைத்துக் கொள்தல்.

2. குறிப்பிட்ட நேரத்தில் அந்தச் செயலைத் துவக்கி விடுதல்.

3. அந்தச் செயலைத் தொடர்வதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதனை அரைகுறையாக விட்டு விட்டுச் சென்று விடாமல் அதனைத் தொடர்தல் (persistence)

4. அந்தச் செயலைத் தொடர்வதற்கு நமக்கு மற்றவரின் உதவி தேவைப்படின், தயங்காமல் அந்த உதவியை நாடிப் பெற்றுக் கொள்தல்.

5. குறித்த நேரத்தில் எடுத்துக் கொண்ட எந்த ஒரு செயலையும் முடித்து விடுதல்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அன்றாட வீட்டுப் பணிகளில் இப்படிப்பட்ட பயிற்சியைத் தொடர்ந்து அளித்து வந்தால் – குழந்தைகள் வளர்ந்து ஆளாகி அவர்கள் ஈடுபடுகின்ற எல்லாச் செயல் பாடுகளிலும் இந்த Good work habit அவர்களுக்குக் கை கொடுக்கும்.

சரி தானே?

Comments