பிரிவும் ஏக்கமும்

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் வழக்கம் போல் மக்களின் நிலைமைகளை அறிய இரவில் உலா வருகிறார்கள். அப்போது ஒரு பெண்மணி வீட்டுக்குள்ளிருந்து சோகமான ஒரு பாடலைப் பாடுகிறாள்.


"முற்றுலும் கருத்துச் சூழ்ந்திருக்கும் கும்மிருட்டு!
முற்றிலும் தனிமையான ஏக்கத்தில் நான்!
கூட்டுத் தோழன் இல்லாததால்
என் மனக்கூடு திறந்து நித்திரை பறந்து போனதே!

இறைவன் மீது ஆணையாக!
என் தேகம் வதைப்பட்டு தவிப்பதால்
அதன் பொருட்டு ஆடுகிறதே இக்கட்டில்!"

இக்கவிதையைக் கேட்ட கலீஃபா அவர்கள் மறுநாள் அப்பெண்ணைப் பற்றி விசாரித்தார்கள். "ஒரு போர் வீரரின் மனைவி" என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. தனது மகள் ஹஃப்ஸாவிடம் "கணவனை விட்டுப்பிரிந்து ஒரு பெண்ணால் எத்தனை நாட்கள் தனியாக பொறுமையுடன் இருக்க முடியும்? - என்று கேட்க - "அதிக பட்சம் நான்கு மாதங்கள் தான்" - என்று ஹள்ரத் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வெட்கத்துடன் கூறினார்கள்.

உடனே "இறைப்பாதையில் போர்புரிய கள்ம் புகும் வீரன் தன் மனைவியைப் பிரிந்து நான்கு மாதங்களுக்குமேல் யுத்த் களத்தில் தங்கியிருக்கக் கூடாது" என கலீஃபா உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

Comments