மார்க்கத்தை சிரைத்து விடும் என்றால் என்ன பொருள்?

'கவனியுங்கள்! நான் உங்களுக்கு தொழுகையை விடவும், நோன்பை விடவும், தர்மம் செய்வதை விடவும், அந்தஸ்தில் ஒரு படி மேலான ஒன்றை உங்களுக்குச் சொல்லித் தரட்டுமா?' என்று நபியவர்கள் கேட்டார்கள். நபித் தோழர்கள் ஆம் என்றார்கள்.


"உங்களுக்குள் உள்ள உறவுகளை சரியான விதத்தில் சீர் திருத்திக் கொள்ளுங்கள்; ஏனெனில் உங்கள் நல்லுறவில் குறைகள் ஏற்பட்டால், அது ஒரு பொருளை சிரைத்து விடும்!" 


அபூ ஈஸா அவர்கள் இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்று சொல்லி மேலும் அறிவிக்கிறார்கள்: 

நபியவர்கள் சொன்னார்கள்: உறவுகளில் குறை இருந்தால் அது முடியை சிரைத்து விடும் என்று நான் சொல்லவில்லை; மாறாக அது உங்கள் உங்கள் மார்க்கத்தை சிரைத்து விடும்!' (சுனன் அத்-திர்மிதி)

GD – மார்க்கத்தை சிரைத்து விடும் என்றால் என்ன பொருள்?


   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا َ


“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்”. (66:6)

 وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا

(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! (20:132)

– இக்கட்டளைகளை எவ்வாறு செயல் படுத்துவது? கடுமை காட்டியா?

மென்மையைக் கடைபிடித்தா? மென்மைக்கு – effect – இல்லை எனும்போது என்ன செய்வது?

கடுமை காட்டினால் உறவுகள் சிதைந்து போய் விடும்!

எல்லாமே சடங்காகி விடும்! இது தான் “சிரைக்கப்படுதல்”என்பதன் பொருள்!

அண்ணலாரின் முன்மாதிரி என்ன?

இஸ்லாமும் மனித உறவுகளும்!

மனித உறவுகளும் – மன நலமும் (insights from social neuro science)

Comments