திருமணம் தாமதமானால்?

சிலருக்கு அல்லது பலருக்கு தனிப்பட்ட அல்லது குடும்ப சூழல் காரணமாக அவர்களின் திருமணம் தாமதமாகி கொண்டே போகலாம்.

ஆனால் அது வரை அவர்கள் தங்களது திருமண உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமே! என்ன செய்வது?

அவர்களுக்காக சில வழி காட்டும் ஆலோசனைகள்:


1. உள்ளச்சத்துடன் தொழுதிட வேண்டும். ஆனால் தொழுகை சடங்காகிப் போய்விடக் கூடாது.

2. உபரியான நோன்புகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

3. வெளியே செல்லும்போது - கண் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு செல்ல வேண்டும்.

4. பெண்கள் முழுமையாக ஹிஜாப் - பேணிட வேண்டும்.

5. பெண்கள், ஆண்கள் கூடுகின்ற பகுதிக்கு செல்வதைத் தவிர்த்திட வேண்டும். ஆண்கள், பெண்கள் இருக்கும் பகுதிக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.  குறிப்பாக இருபாலர் படிக்கின்ற கல்லூரியில் சேர்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

6. பாலியல் சம்பந்தப்பட்ட பேச்சுக்களைப் பேசுகின்ற இடங்களைத் தவிர்க்க வேண்டும்.

7. பாலியல் சம்பந்தப்பட்ட வார மாத இதழ்கள், வலைதளங்கள் இவற்றை முற்றாகத் தவிர்த்திட வேண்டும்.

8. உடற்பயிற்சி அவசியம்.

9. திருமணம் ஆகும் வரையிலான கால கட்டம் வரை - ஒரு குறிப்பிட்ட லட்சியத்தை நிறைவேற்றிட தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

10. இறைவனைப் பற்றி அதிகம் அதிகம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். எப்போதும் திருக்குர்ஆனும் கையுமாக இருந்திட வேண்டும்.

Comments