சோர்ந்து போய் அமர்ந்து விடாதே!

தீன் என்பதன் பொருள்: பாதை (the path)

ஷரீஅத் என்பதன் பொருள்: பின்பற்றப்பட வேண்டிய பாதை (pathway to be followed)

பாதையின் துவக்கம்: அல்லாஹ்விடமிருந்து..

பாதையின் முடிவு: அல்லாஹ்விடமே திரும்புதல்

ஹிதாயத் என்பதன் பொருள்: நேர்வழி

வழிகாட்ட வந்தவர்கள்: இறைத்தூதர்கள்

ஒட்டுமொத்தப் பாதை என்பது: நமது வரலாறு

இந்தப் பாதையில் நாம் எங்கே?
நமது காலமும் நாம் வாழும் இடமும் தான் (time and space);

அதாவது காலம்: 21- ஆம் நூற்றாண்டு; இடம்: நமது இந்தியா

நமக்கு இந்த இடத்தைத் தேர்வு செய்தவன் யார்? அல்லாஹு தஆலா!

நமக்கென்று இந்த 21 - ஆம் நூற்றாண்டைத் தேர்வு செய்தது யார்? அதே அல்லாஹு தஆலா தான்!

அப்படியானால் - இந்த இடத்தில் இந்த நேரத்தில் நம்மை எதற்காக அனுப்பி வைத்திருக்கின்றான்?

விடை எங்கே? அது திருக்குர்ஆனில் இருக்கிறது!

அது நீ யார் என்று உனக்குச் சொல்லும்!

உன்னைப் படைத்தவனைப்பற்றிச் சொல்லும்!

மற்றப் படைப்பினங்களைப் பற்றிச் சொல்லும்!

நீ படைக்கப்பட்டது எதற்காக என்றும் சொல்லும்!

நீ செல்ல வேண்டிய பாதையைப் பற்றியும் சொல்லும்!

வாழ்க்கை என்பது என்ன என்பதை அது உனக்குக் கற்றுக் கொடுக்கும்.

விதை ஒன்று முளை விட்டு வளர்ந்து மரமாகி கனி கொடுப்பது போலத் தான் உன் வாழ்க்கையும்!

என்ன மாற்றம் வரும் உனக்குள்?

அழகிய மாற்றம் ஒன்று உனக்குள் வரும்!

உன்னைச் சுற்றியுள்ள உலகத்திலும் அந்த மாற்றம் பிரதிபலிக்கும்! அந்த மாற்றம் மிக அழகானது!

உன்னையே நீ நேசிப்பாய்! (you will love yourself!); உலகத்தை நீ நேசிப்பாய்!

உன்னைச் சுற்றி வாழும் சக மனிதர்களை நீ நேசிப்பாய்!

அன்பு செலுத்துவாய்! இரக்கப்படுவாய்! அள்ளிக் கொடுப்பாய்! உன்னையே அர்ப்பணிப்பாய்!

உன் பிறப்பிற்கு ஒரு பொருள் இருக்கும்! உன் இறப்பிற்கும் ஒரு பொருள் இருக்கும்;

இறைத்தூதர் (ஸல்) உனக்குச் சொன்னது இப்படித்தான்:

ஒரு வழிப்போக்கனைப் போல் நீ வாழ்ந்து கொள்!

மூட்டைகளைச் சேகரிக்காதே! பயணம் சிரமமாகி விடும்!

சோர்ந்து போய் அமர்ந்து விடாதே! பயணத்தின் இலக்கைத் தவற விட்டு விடுவாய்!

உன் பயணத்தின் முடிவில் உன் இறைவனை நீ காண்பாய்!

உன் இறைவனை இன்முகத்தோடு சந்திக்க நீ தயாரா?

இறைவன் இதோ உன்னை இப்படி அழைக்கின்றான்:

நான் இருக்கின்றேன் நீ களத்தில் இறங்கு! என் பெயரைச் சொல்லி நீ விரைவில் துவங்கு!

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

இறைவனுக்காகவே இங்கே நாம் இருக்கின்றோம்...

அவனிடத்திலேயே மீண்டும் நாம் திரும்பிச் செல்வோம்..

Comments